ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. காட்சிப்படுத்த கூடாதவிலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும்வகையில் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி – முதல்வர் பன்னீர்செல்வம் இடையேயான சந்திப்பின் போது, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாக கூறிய பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்தியஅரசு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.


இதன் வெளிப்பாடாக, தமிழகத்தில் நிலவும் சூழல்காரணமாக ஜல்லிக்கட்டு வழக்கில் அடுத்த ஒருவாரத்திற்குள் தீர்ப்பை வெளியிடகூடாது சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாக அட்வகேட் ஜெனரல் முகுல் ரத்தோகி தெரிவித்தார்.மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரசட்டம் பிறப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம்செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட  வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு அனுப்பிஉள்ளது.


இந்த சட்டவரைவுக்கு முறையே மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து சட்டவரைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவு அல்லது நாளைகாலை ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். இதற்காக, கவர்னர் வித்யாசாகர் நாளை சென்னைவருகிறார்.

அவசரசட்டம் நாளை அமலுக்குவரும் நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களின் எழுச்சிபோராட்டம் வெற்றியின் விளம்பை தொட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...