அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள். !
தேசியக் கொடி நம் தாய்க்கு சமமானது.
அதனால் தான் அதை “தாயின் மணிக்கொடி பாரீர் “ என்று பாடினார் பாரதி. நம் தேசியக் கொடி நம் உயிர் போன்றது. அதனால் தான் குமரன் கொடி தோளில் இருக்கலாமே தவிர தரையில் படக் கூடாது என்று போராடினார்.இக்கொடி நம் தொப்புள் கொடியை விட நம் வாழ்வோடு தொடர்புடையது.
அதனால் தான் நம் இளைஞர்களின் வீர உதாரணமாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு முன்பே அந்தமானில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு சுதந்திரத்தை பிரகடனம் செய்துவிட்டு அடுத்த பிறவி என்று உண்டென்றால் நான் தமிழனாகப் பிறக்க வேண்டும் என உரையாற்றினார்.
அதுமட்டுமல்ல நம் கொடி சுதந்திரத்தன்று கொடியேற்றும்போது மங்களகரமாக இருக்க வேண்டும் என்று தமிழரான திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசிக்க வாசிக்கத் தான் நம் முதல் சுதந்திரக் கொடியே மேலெழும்பியது.
ஆனால் இன்று தமிழகத்தில் மனதை குலுங்க வைக்கும்படி நம் உயிருக்கு நிகரான தேசியக் கொடி அவமதிக்கப்படுவதும் கருப்பாக சித்தரிக்கப்படுவதும் வேதனை அளிக்கக் கூடியது. நம் தேசியக் கொடியை அவமதிப்பவர்கள் தமிழனாக இருக்க முடியாது ஏன் மனிதனாகக் கூட இருக்க முடியாது.
அது மட்டுமல்ல நம் நாட்டின் உணர்வு மட்டுமல்ல சட்டமும் அதை அனுமதிப்பதில்லை. அதனால் தேசிய கொடியை அவமதிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். நேரில் மட்டுமல்ல முகநூலிலும் இணையத்திலும் தேசியக் கொடியை அவமதிப்பதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது. தெரியாது செய்திருந்தால் இனி தவிர்க்கவும். தெரிந்து செய்திருந்தால் தடுக்கவும் நீக்கவும்.
நான் தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் வைக்கும் கோரிக்கை தேசியக் கொடியை அவமதிப்பவர்களை நேரில் மட்டுமல்ல முகநூலில் அவமதிப்பதையும் தடுக்க வேண்டும். மீறி அவர்கள் அவமதிப்பார்களானால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இப்படி அவர்கள் நம் தாய்க்கு சமமான தேசியக் கொடியை அவமதிப்பது முகத்தின் நேராக இருந்தாலும் சரி முக நூலாக இருந்தாலும் சரி உடனே கண்டறியப்பட வேண்டும் தண்டிக்கப் பட வேண்டும்.
எப்படி இளைஞர்களின் இடையே புகுந்த தேச விரோத சக்திகள் தவறாக நல்ல இயக்கத்தை திசை திருப்பினார்களோ அதே போல தேச விரோதிகள் இளைஞர்கள் என்ற போர்வையில் இதை செய்யக்கூடும். அதனால் தேசியக் கொடியின் மாண்பு காக்கப்பட வேண்டும். அதற்கு ஊறு விளைவிப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். மீறினால் தண்டிக்கப்பட வேண்டும். அரசும் காவல்துறையும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியினர் தொண்டர்கள் அனைத்து மண்டல்களிலும் மாவட்டங்களிலும் உற்சாகத்துடன் தேசியக் கொடியோடு ஊர்வலம் சென்று தேசியக் கொடியேற்றி இந்த குடியரசு தினத்தை மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.
இந்தக் குடியரசு தினத்தை தேச பக்தி தினமாக கொண்டாடுவோம்.
அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.
தேசியக் கொடி நம் தாய்க்கு சமமானது. !
என்றும் மக்கள் பணியில்
(Dr. தமிழிசை சௌந்தர்ராஜன்)
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.