இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்தியபட்ஜெட் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட் என பாஜக.,தேசிய தலைவர் அமித்ஷா கருத்துதெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குபிறகு, டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை அமித் ஷா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இது பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட். 2014 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். அரசியலில் வெளிப் படை தன்மை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை இருமடங்காக பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூகபாதுகாப்பு, சுகாதாரம், ஏழைமக்கள் அனைவருக்கும் வீடு வழங்குவதிலேயே பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் கவனம் உள்ளது பாராட்டுதலுக் குரியது. வேலை வாய்ப்பை உருவாக்குவது , தொழிலாளர்கள் வளர்ச்சி மற்றும் உற்பத்திதுறையில் முன்னேற்றம் ஆகியவற்றிலேயே அரசின்கவனம் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரகவளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.37,000 கோடியில் இருந்து 48,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சிக்குஉதவும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.