அதிகாரம் கண்ணை மறைப்பதால் மத்திய அரசின் சாதனை தெரியவில்லை

ஆட்சி அதிகாரம் கண்ணை மறைப்பதால், மத்தியஅரசின் சாதனைகளை, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவால் பார்க்க முடிய வில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர், அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்தமாநிலத்தில், மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடக்கஉள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல், நாளை நடக்கிறது. இந்நிலையில், லக்கிம் புர்கேரியில், நேற்று நடந்த, பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசு திறம்படசெயல்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது. இந்த பணிகளை, ஆட்சி அதிகாரம் கண்ணை மறைப்பதால், உ.பி., முதல்வர் அகிலேஷால் பார்க்கமுடியவில்லை.

தன் ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை, அகிலேஷ் பட்டியலிடத் தயாரா? இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு, உ.பி., மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அனைத்து சமூக விரோதிகளும், அடுத்த ஆறுமாதங்களில் சிறையில் தள்ளப்படுவர். உ.பி.,யில், சட்டம் – ஒழுங்கு மோசமாக சீர்கெட்டுள்ளது. பாலியல் பலாத்காரங்கள், கொலைசம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. சிறைகளில் இருந்தே, மாபியாகும்பல்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. சிறப்பான செயல்பாடாக, அகிலேஷ் கூறுவது இவற்றைத்தானா? முந்தைய, பகுஜன் சமாஜ் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிப்பதாக, அகிலேஷ் வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாறு விசாரணை நடத்தப் படாதது ஏன்? இதற்கு பிரதிபலனாக, அவர் பெற்றது என்ன? காங்., சமாஜ்வாதி கட்சி, பகுஜன்சமாஜ் கட்சிகளின் அரசுகள், அனைத்து விஷயங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளன. அக்கட்சிகள் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புகோருவதற்கு தார்மீக உரிமை இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.