ஈஷாயோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 24) கோவை வருகிறார்.
கோவை வெள்ளிங் கிரி மலைப் பகுதியில் உள்ள ஈஷாயோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முகதோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நாளை பிரதிஷ்டை செய்யப்படஉள்ளது. மகா சிவ ராத்திரியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் ஆதியோகி சிலையை மோடி திறந்துவைக்கிறார். இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் நாளை மாலை 5.20 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷாயோகா மையத்துக்கு செல்கிறார். விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு பிரதமர் டில்லி செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.