பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை கூடவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமான்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கூடி கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற்றது. அதில், 2017-2018-ஆம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு தாக்கல்செய்யப்பட்டது.
இதனையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்றுதொடங்கியது. இரண்டாவது அமர்வானது ஏப்ரல் 12-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை கூடவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
நடைபெற்று முடிந்த ஐந்துமாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், உத்தரப் பிரதேசம், உத்தரக்கான்ட், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக-வுக்கு வெற்றிவாய்புகள் அதிகம் உள்ளது என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.