உ.பி. உள்ளிட்ட சட்டப் பேரவைத் தேரதலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய இந்தியா உருவாகிவருகிறது என்றும் அது வளர்ச்சியை நோக்கிபயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்எப்போதும் இல்லாதவகையில் பாஜக அமோகவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. குறிப்பாக நாட்டின் பெரியமாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 4-ல் 3 பங்கு இடங்களை பாஜக கைப்பற்றி உள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ்கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை படுதோல்வி அடைந்தன.
இது போல உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70-ல் 57 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கூறியதாவது:
நாட்டில் உள்ள 125கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் திறமை உள்ளிட்ட காரணங்களால் புதியஇந்தியா உருவாகி வருகிறது. அது வளர்ச்சியை நோக்கிபயணிக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைப்பது தொடர்பாக எனது பெயரில் (நரேந்திர மோடி) உள்ள 'செயலி'யில் பொதுமக்கள் தங்கள்கருத்துகளை தெரிவிக்கலாம்.
வரும் 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாட உள்ளோம். அப்போது, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய்படேல் மற்றும் டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பெருமைசேர்க்கக்கூடிய இந்தியாவை நாம் கட்டமைத்திருக்க வேண்டும்'' என மோடி கூறினார்.
பிரதமர் மோடி புதிய இந்தியா வளர்ச்சிகுறித்து பேசிய 10 முக்கிய தகவல்கள்:
1. புதிய இந்தியா வளர்ச்சி யடைந்து வருகிறது. (பேச்சின் நடுவே 20 முறை புதியஇந்தியா குறித்து குறிப்பிட்டார்)
2.2022 ம் ஆண்டில் புதியஇந்தியா முழுமையடையும் , 75வது சுதந்திர தினத்தில் இந்தியா புதிய விடுதலையை பெறும்
3. புதிய இந்தியா இனி இளைஞர்களின் கனவாக அமையவேண்டும்.
4. புதிய இந்தியாவில் பெண்களின் கனவுகள் நிறைவேறி யிருக்கும்.
5. எங்களது செயல்களில் தெரியாமல் தவறுகள் நடக்கலாம், எண்ணம் தவறாகஇல்லை
6. புதிய இந்தியாவிற்கு ஏழைகளின் வளர்ச்சியே முக்கியமாக அமைகிறது.
7. ஏழைகள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையே பயன் படுத்துகின்றனர். சலுகைளை அல்ல
8. இந்த அரசு மக்களிடம் தாழ்மையாகவே நடந்து கொள்ளும், அதிகாரம் என்பது பதவியில்அல்ல
9. எழைகளின் பலத்தை என்னால் கண்டறியமுடிகிறது. அவர்களின் வளர்ச்சி நாட்டை பெரிதும் பலப் படுத்தும்.
10. ஏழைகள் வளர்ச்சியடைந்தால், நடுத்தரமக்களின் பாரம் தானாக காணாமல் போகும்.
You must be logged in to post a comment.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
பக்தி பாடல்களில் ஒரே ஒரு கடவுளுடைய பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது உங்களுக்கு ஒரே கடவுள் மட்டும் தானா