நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் அலுவல்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும்

நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் அலுவல்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.


இரு அவைகளிலும் பாஜக எம்.பி.க்களின் வருகை குறைவாக இருப்பதாகக்கூறிய அவர், அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் மையப்பகுதியில் பாஜக நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் அனந்த்குமார், மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் வருகை குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தின் இருஅவைகள் கூடும் போதும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவ்வாறு நீங்கள் பங்கேற்றால் தான் என்னால் பல விஷயங்களை நிறைவேற்றமுடியும். ஆனால், உங்கள் சார்பாக என்னால் அவையில் பங்கேற்க முடியுமா?


நாடாளுமன்றம் கூடும் போது உங்களில் (பாஜக எம்.பி.க்கள்) யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டு மானாலும் அழைப்பேன். எனவே, நீங்கள் தவறாமல் இரு அவைகளிலும் பங்கேற்கவேண்டும். இது உங்களுடைய அடிப்படை கடமையாகும் என்றார் பிரதமர் மோடி.


மேலும், ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் அளவிலான கட்சியின் கூட்டுக்கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதையும் எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...