''யோகா பயிற்சியின் ஒருஅம்சமான, சூரிய நமஸ்காரம், முஸ்லிம்கள் நமாஸ்செய்வதை போன்றது. ஆனால், மக்கள் மத்தியில், மதரீதியிலான பிளவை ஏற்படுத்த துடிக்கும் தீயசக்திகள், இந்த உண்மையை மறைத்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்,'' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்ய நாத் முதல்வராக உள்ளார். லக்னோ வில் மூன்று நாட்கள் நடக்கும், 'உ.பி., யோகா திரு விழா'வை துவக்கிவைத்து, ஆதித்தயாத் பேசியதாவது:யோகா பயிற்சியின்போது, சூரிய நமஸ்காரம் பயிற்றுவிக்கப்படு கிறது. பல்வேறு கோணங்களில் உடலைவளைத்து செய்யும் இந்த பயிற்சி, முஸ்லிம்கள் நமாஸ்செய்வதை போன்றது. சூரிய நமஸ்காரத் திற்கும்,முஸ்லிம்களின் தொழுகைக்கும் பெரியவித்தியாசம் கிடையாது.
மக்கள் நலன்விரும்பாத, சுயநலவாதிகள், மக்கள்மத்தியில் மதரீதியிலான பிளவை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்பும், இதுபோன்ற யோகா திருவிழாக்கள் நடந்துள்ளன. ஆனால், அவை அனைத்திற்கும், மதச்சாயம் பூசப்பட்டது.
ஆனால், 2014ல் நாட்டின் பிரதமராக பதவியேற்ற மோடி, யோகாவின் பெருமையை உலகறியச் செய்தார். நாட்டு மக்களின் நலன் கருதி, பிரதமர் நரேந்திர மோடி தைரியமான பலமுடிவுகளை எடுத்தது போல், உ.பி.,யில் வாழும், மக்களின் நலனுக்காக எந்ததுணிச்சலான முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன். சூரியனுக்கு மதச்சாயம் பூசி, மக்கள்
மத்தியில் பிளவை ஏற்படுத்த நினைப்பவர்களை, அந்த கடவுளும் மன்னிக்கமாட்டார். அவர்களை, சூரிய வெளிச்சமே கிடைக்காத, இருட்டறையில் தள்ளியும், ஆழ் கடலில் மூழ்கடித்தும் தண்டிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலகவர்னர் ராம் நாயக், 60 வயதில், தான் புற்றுநோயால் பாதிக் கப்பட்டபோது, யோகா பயிற்சிகளின் மூலம் புதுதெம்பு பெற்ற தோடு, நோயிலிருந்து பூரண நலன் பெற்றதாகவும் கூறினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.