திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரில் நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது, அமித்ஷா இவ்வாறு தெரிவித்தார். மேலும், திரிபுராவுக்கு மத்திய அரசுஒதுக்கிய 35 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசு முறையாக செலவழிக்க வில்லை என்று குற்றம்சாட்டிய அமித்ஷா, இதனால் மாநிலத்தின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ரோஸ் பள்ளத்தாக்கு திட்ட முறைகேட்டில் முதல்வர் மாணிக்சர்க்கார் உட்பட பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், இதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார். மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை கொண்டு வந்துள்ள நிலையில், திரிபுராவில் அரசு ஊழியர்கள் இன்னும் 4-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படியே சம்பளம்பெறுகின்றனர் என்றும், அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
எனவே, மாநிலத்தின் வளர்ச்சியை கருதி திரிபுரா மக்கள் வரும் பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அங்கு மார்க்சிஸ்ட் ஆட்சியை அகற்றுவதே பாஜகவின் இலக்கு என்றும் அமித்ஷா பேசினார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.