நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடூரக் கெடுபிடிகளை கட்டவிழ்த்து விடுவதா?, மெட்டல் டிடக்டர் மூலம் சோதனையிட்ட பின்னரே மாணவர்களை தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதிபபதா?. மாணவிகளின் தலைமுடியைக் கலைவதா?, சுடிதாரில் முழுக் கை இருந்தால் வெட்டி வீசியும், மாணவிகள் துப்பட்டா மேலாடை அணியவும் அனுமதிக்காமல் கெடுபிடி செய்வதா?,. அவர்கள் அணிந்திருந்த பொன் அணிகளையும் அகற்றுவதா?,
மாணவர்களின் முழுக் கை சட்டையை அரைக்கை சட்டையாக்குவது, பேண்ட் சட்டையில் இருந்த பெரிய பொத்தான்களையும், உலோகத்துடன் கூடிய இரும்புப் பட்டைகளையும் அவிழ்ப்பது என கடும் கெடுபிடிகளை மேற்கொள்வதா?, என தேர்வில் முறைக்கேடுகளை நிகழ்த்தி பல கோடிகளை குவித்த மாபியா கும்பல்கள் எழுப்ப வேண்டிய கேள்விகளை எல்லாம்!! அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமாகா உள்ளிட்ட கட்சிகள் எழுப்பியுள்ளது உண்மையில் அவர்களது செயல் மாணவர்களின் நலன் சார்ந்தது தானா? என்ற கேள்வி அலைகளை எழுப்பியுள்ளது..
இனி இந்தியாவில் மருத்துவம் பயில வேண்டும் என்றால் நீட் கட்டாயம். நீட் தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணே!. இனி பணம் படைத்தவர்கள் மருத்துவ கல்லூரிகளை வேண்டுமானால் கட்டிக் கொள்ளலாம் ஆனால் மருத்துவ சீட்டை ஒருகாலும் வாங்க முடியாது. இதுவே நீட்டின் சிறப்பம்சம்.
எனவேதான் லட்சங்களை கொட்டி சீட் வாங்கியவர்கள், அதே லட்சங்களை கொட்டி முறைக்கேடு செய்து தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்க முயல்வார்கள் என்பதற்காக தான் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசின், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு மட்டுமே, ஏ.ஐ. பி.எம்.டி., என்ற, அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத்தேர்வான – 'நீட்' நடத்தப்பட்டது.
கடந்த, 2015 மே மாதம், இந்த பொது நுழைவுத் தேர்வு நடந்த போது, வினாத்தாள், 'லீக்' ஆனது. இதற்காக, பணம் கொடுத்த மாணவ, மாணவியர் பலர், தங்கள் பனியன், 'பிரா, இன்ஸ் கர்ட்' போன்ற உள்ளாடைகளில், 'மைக்ரோ ப்ளூடூத் டிவைசர்' பொருத்தி, அதற்கான மைக்குகளை, சிறிய பொத்தான் வடிவில், காதுகளில் கம்மல் போன்று அணிந்து கொண்டனர். 'சிம் கார்டு' பொருத் தப்பட்ட. இந்த டிவைசர் மினி மொபைல் போன் போல் இயங்கியது.
பதில்களை தயாராக வைத்திருந்த தரகர்கள், தேர்வுஅறையில் இருந்தவர்களிடம், மொபைல் ப்ளூடூத் டிவைசரில் அழைத்து, எந்த கேள்விக்கு, எந்தபதில் என்பதை கூறினர். இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். இப்படியாக 100 மாணவர்கள் வரை மாட்டினர். மாட்டாமல் தப்பித்தவர்கள், மற்றவர்களின் வாய்ப்பை அநியாயமாக தட்டிப் பறித்தவர்கள் எத்தனையோ! எத்தனை பேர் இருக்கலாம்.
இப்படி போன்ற முறை கேடுகள் இனி நடைபெறக் கூடாது என்பதற்காகவே ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, அது முன்கூட்டியே மாணாக்கர்களுக்கு தெரிவிக்கவும் பட்டன, ஆனால் அதை ஒழுங்காக பின்பற்றாமல் முழுக்கை சட்டையை கிழித்தார்கள். ஏற்ப்பின்கள், பொன் அணிகலன்களை கிழட்டினார்கள் என்று ஓலமிடுவது குற்றம் செய்பவர்களை ஊக்குவிக்கும் செயலாகும். கல்வியை மட்டுமே ஏற்றமிகு ஊன்று கோலாக ஆயிரம்! ஆயிரம்!! நம்பிக்கையுடன் இருக்கும் ஏழை மாணாக்கர்களுக்கு செய்யும் துரோகமும் ஆகும்.
தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.