''பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக, மூன்றாண்டு ஆட்சியை சிறப்பாக நிறைவுசெய்துள்ளது. ஆரம்பத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால் மதம்சார்ந்து இயங்கும், தங்களுடைய கொள்கைகளை மக்களிடம் திணிக்கும் என்று பலவிமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால், இந்த மூன்று வருடங்களில் மதத்தின் அடிப்படையில் எந்த வித கருத்துகளையும் திணிக்காமல் ஒவ்வொரு நாளும் நாட்டின் குடிமக்களுக்காகவே பாஜக உழைத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் நரேந்திர மோடி.
அது மட்டுமல்ல, ஒருநாடு வளம்பெற வேண்டுமானால் அங்குள்ள பெண்கள் சுதந்திர மாகவும் கல்வி அறிவோடும் இருக்கவேண்டும் என்பதுதான் பிரதமரின் எண்ணம். அதற்காக, பெண்களுக்கான பல சிறப்புத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அவருடைய சிந்தனைகளெல்லாம் மக்கள்மீதும் நாட்டின் வளர்ச்சியின் மீதும் இருக்கிறது. மோடியின் ஆட்சியில் அனைத்துப் பிரிவைச்சேர்ந்த மக்களும் ஒன்றே. ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயரவேண்டும் என்பதே அவரின் இலக்கு. அதனால் தான் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சமையல் காஸ் இணைப்பு, தொழில் முனைவோருக்கான முத்ராவங்கித் திட்டம், பெண் குழந்தைகளுக்கான தன்ஜன் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இது வரையிலான சுதந்திர இந்தியாவில் அதிகளவில் பெண் ஆளுநர்கள் இருப்பது இந்த ஆட்சியில் தான்.
சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு எந்த ஒரு அரசுத்திட்டத்தையும் செயல்படுத்தி விட முடியாது. கண் துடைப்புக்காக இல்லாமல், அவர்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்ததோடு, பெண்களின் சுதந்திரத்துக்காக பல நெருக்கடியான சவால்களை எதிர்கொண்டுள்ளார். அதை முஸ்லீம் பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான், உத்திரபிரதேச தேர்தலில் மிகப்பெரிய அளவில் முஸ்லீம் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. ஆக, பாஜக பெண்களுக்கான அரசாகவும் நாட்டின் பாதுகாப்போடு கூடிய வளர்ச்சியை நோக்கிய ஆட்சியை கொடுக்கும் எனவும் மக்கள் நம்புகிறார்கள். வரும்காலங்களில் மீதமிருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் வாக்குகளும் பாஜகவின் பக்கம் திரும்பும் என்பது உறுதி.''
நன்றி வானதி சீனிவாசன்
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.