ரூபாய் நோட்டுவாபசால் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்த போதிய பணம்கிடைக்காமல் அவதிப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ரூபாய்நோட்டு வாபஸ்திட்டம் அறிவிக்கும் முன்னர்வரை, ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் தெருக்களில் கூடுவர். தற்போது 25 பேர்கூட போராட்டத்திற்கு வருவதில்லை.
ரூபாய் நோட்டுவாபஸ் திட்டத்திற்கு பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் நக்சலைட்கள் போதியபணம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்த திட்டத்தால், முன்னர் பொருளாதாரத்திற்கு வெளியே புழக்கத்தில் இருந்தபணம், தற்போது முறையாக வங்கி நடைமுறைக்குள் வந்துள்ளது.
பாதுகாப்பு கிராமப்புரவளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிகளவில் செலவுசெய்ய விரும்புகிறோம். உலக தரம்வாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்படவேண்டும். அப்போதுதான், கோரக்பூர் சம்பவம் போன்றவை நிகழாமல் இருக்க வேண்டும்.
மோடி அரசு, 7 முதல் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில்மட்டும் திருப்திபடவில்லை. வளர்ச்சியை அதிகப்படுத்த, நாட்டின் நலன்கருதி 2014 முதல்பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பா.ஜ., ஆட்சியில்தான் ஜிஎஸ்டி, ரூபாய்நோட்டு வாபஸ், பினாமி சொத்துதடை, ஸ்பெக்டரம், இயற்கை வளங்கள் நேர்மையான முறையில் ஒதுக்கீடு, பலநாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தடை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.