மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக. அரசு அமைந்தபின்னர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கவேண்டும் என்பதற்காக 2014-ம் ஆண்டில் ‘ஜன்தன் யோஜானா’ எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசின் மானிய உதவிகள் அனைத்தும் இதன் மூலம் மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தக்கணக்கு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் இன்று வானொலி வழியாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜன்தன் யோஜானா திட்டத்தின்கீழ் இதுவரை 30 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு 65 ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய உரையின்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
மனம் நிறைந்த கனவுகளுடன் ஜன்தன் யோஜானா திட்டத்தை நாம்தொடங்கி நாளையுடன் (28-ம் தேதி) மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளில் உள்ள பிரபலபொருளாதார நிபுணர்களுக்கும் இந்ததிட்டம் அப்போது விவாதங்களின் மையப்பொருளாக இருந்தது.
தற்போது இந்ததிட்டத்தின்கீழ் 30 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு அவர்கள் பயனாளிகளாக இணைக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக் கையானது சிலநாடுகளில் உள்ள மக்கள் தொகையை விட அதிகமானது. ஜன்தன் யோஜானா திட்டத்தின் கீழ் அடித்தளத்தில் உள்ள மக்கள் 65 ஆயிரம்கோடி ரூபாயை வங்கிகளில் செலுத்தியுள்ளனர்.
ஒரு வகையில், இந்தப்பணம் ஏழைமக்களின் முதலீடாகவும் அவர்களின் எதிர் காலத்துக்கான அதிகாரம் ஆகவும் உள்ளது. இந்ததிட்டத்தின்கீழ் வங்கிக்கணக்கு தொடங்கிய அனைவருக்கும் காப்பீடுவசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாண்டு காலத்துக்குள் சமூகத்தின் கடைக் கோடியில் உள்ள கடைசிநபரும் நாட்டின் பொருளாதார மையநீரூற்றில் இணைந்திருப்பதை எண்ணி நான் மன நிறைவு கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.