நிர்மலா சீதாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

பாதுகாப்புத் துறையின் புதிய அமைச் சராகப் பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனை, ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், கடற்படை தலைமைத்தளபதி சுனில் லாம்பா, விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோர் திங்கள் கிழமை சந்தித்துப்பேசினர்.


தில்லியில் நிர்மலா சீதாரமனின் இல்லத்தில் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பாதுகாப்புத்துறை எதிர்நோக்கியுள்ள ஒட்டுமொத்த சவால்கள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சரிடம் மூன்று தளபதிகளும் எடுத்து ரைத்தனர்.


நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்புத்துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே, பாதுகாப்புத் துறையைக் கூடுதலாகக் கவனித்துவந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜப்பானில் நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக, ஞாயிற்றுக் கிழமை இரவு, டோக்யோவுக்குப் புறப்பட்டுச்சென்றார். ஜப்பானில் இருந்து அவர் தாயகம்திரும்பிய பிறகு, பாதுகாப்புத் துறையின் பொறுப்பை நிர்மலா சீதாராமன் புதன் கிழமை ஏற்பார் என்று தெரிகிறது.
சர்வதேச நாடுகளின் அரசியல் செயல்பாடுகளும், பிராந்திய அளவின பாதுகாப்பு அம்சங்களும் மாறிவருவதால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் போர்த்திறனை வலுப்படுத்த வேண்டியது உள்ளிட்ட சவால்களை நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ளவிருக்கிறார். மேலும், முப்படைகளை நவீனப் படுத்தும் பணியையும் அவர் விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...