பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி யேற்றுள்ள நிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்துபேசுவார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றபின், முதன்முறையாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாதுகாப்புத் துறை விவகாரங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் இடம் பெற்றிருந்தனர்.
அமைச்சரவை கூட்டத்திற்கு முன் பாதுகாப்பு விவகாரங் களுக்கான அமைச்சரவை கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இனிதினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்து நிர்மலாசீதாராமன் ஆலோசனை நடத்துவார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீரர்கள், அதிகாரிகள் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வுதொடர்பான முடிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.