பெற்றதாயை மம்மி என்று உதட்டோடு அழைக்காமல், அம்மா என்று உள்ளத்திலிருந்து கூப்பிடுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
பிரபல கர்நாடக இசைமேதையான எம்எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளையொட்டி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டெல்லியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம்மை ஈன்றெடுத்த பெற்றோரை மம்மி, டாடி என்று ஆங்கிலத்தில் கூப்பிட்டுவருகிறோம், அப்படி கூப்பிடும் போது வெறும் உதட்டிலிருந்து மட்டும் வார்த்தைகள்வருகின்றன.
ஆனால், அதுவே, தாய் மொழியில் கூப்பிடும் போது, உதாரணத்திற்கு அம்மா மற்றும் உருதுமொழியில் அம்மி என்று கூப்பிடும் போது, நம்முடைய உள்ளத்திலிருந்து அந்த வார்த்தைகள் மேலோங்குகிறது. மேலும், தாய் மொழியை என்றும் மறக்கக்கூடாது, அப்படி மறப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது.
இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.