மோடிக்கு காஷ்மீரைச்சேர்ந்த குப்பை அள்ளும் இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி யில் பேசும்போது தன்னைப்பற்றிக் குறிப்பிட்டதற்காக மோடிக்கு காஷ்மீரைச்சேர்ந்த குப்பை அள்ளும் இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கி யத்துவம் பற்றியும், காஷ்மீரைச் சேர்ந்த குப்பை அள்ளும் பிலால்தர் என்ற 18 வயது இளைஞரின் சேவை பற்றியும் கூறி அந்த இளைஞருக்கு பாராட்டுதெரிவித்தார். தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்ரீநகர் நகராட்சியின் அதிகாரபூர்வ தூதராக கடந்த ஜூலைமாதம் பிலால் தர் நியமிக் கப்பட்டார்.

இதுகுறித்து மோடி பேசும்போது, ‘‘விழிப்புணர்வு பணிக்காக அதிகாரபூர்வ தூதர்களாக திரைப்படம் அல்லது விளையாட்டு துறையை சேர்ந்தவர்களை நியமிப்பது வழக்கம். தூய்மைஇந்தியா திட்டத்துடன் பல ஆண்டுகளாக தன்னைத் தொடர்புபடுத்தி கொண்டிருக்கும் பிலால்தர் தூய்மை விழிப்புணர்வு பணிக்கான தூதராக ஸ்ரீநகர் நகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய ஊலர் ஏரியில் இருந்து பிளாஸ்டிக், பாலிதீன், பாட்டில்கள், கழிவுகள், குப்பைகளை அவர் அகற்றிவருகிறார். இதன் மூலம் அவர் சம்பாதிக்கவும் செய்கிறார். அவரது பணியை பாராட்டுகிறேன்’’ என்று கூறினார்.

இதற்கு பிலால்தர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘வானொலி நிகழ்ச்சியில் என்னைப்பற்றி பிரதமர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது ஆயுள்முழுவதும் தூய்மைப் பணியிலும் மக்களுக்கு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபடுவேன்’’ என்றார்.

குப்பை அள்ளி அதில் கிடைக்கும் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்திவந்த பிலால் தரின் தந்தை 2003-ல் புற்றுநோயால் காலமானார். பின்னர், தாயையும் 2 சகோதரிகளையும் காப்பாற்ற ஸ்ரீநகர் ஏரியில் குப்பைஅள்ளும் பணியில் பிலால் ஈடுபட்டு வருகிறார். இதில் கிடைக்கும் பொருட்களை விற்பதன் மூலம் ஒருநாளைக்கு ரூ.200 வரை கிடைக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரம் கிலோ கழிவுகளை பிலால் அகற்றுவதாக கூறுகின்றனர். கடந்த ஜூலை மாதம் ஸ்ரீநகர் நகராட்சியின் தூய்மை விழிப்புணர்வுதூதராக அவர் நியமிக்கப்பட்டார். நகராட்சி சார்பில் விரைவில் அவர் மக்களை சந்தித்து தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...