ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது சொந்த முடிவு

ரஜினி அரசியலில் குதித்து இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது சொந்த முடிவு. இதில் பா.ஜனதாவுக்கு எந்ததொடர்பும் இல்லை.

யாரும் பின்னணியில் இருந்து இயக்கவேண்டிய நிலையில் ரஜினி இல்லை. பா.ஜனதாவுக்கும் எந்தகட்சிக்கும் பின்னால் இருந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக. பிளவுபட்டபோதும் பா.ஜனதாதான் இயக்குகிறது என்றார்கள். மோடி, கலைஞர் வீட்டுக்கு மரியாதை நிமித்தமாக சென்றதையும் தவறாக விமர்சிக்கிறார்கள். திமுக. வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தின் அரசியல் நிலைமை இதுதான். பா.ஜனதா வளர்ந்துவிட கூடாது. வந்துவிடகூடாது என்ற ஒற்றை நோக்கத்தை தவிர இவர்களுக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை.

ஊழல் எதிர்ப்பு, ஆன்மீக அரசியல் என்று ரஜினி குறிப்பி ட்டுள்ளார். நாங்களும் ஊழலை எதிர்ப்பவர்கள். ஆன்மீக அரசியல்வேண்டும் என்று விரும்புபவர்கள். எனவே ரஜினியின் புதியகோணத்திலான அரசியலை வரவேற்கிறோம்.

ஆன்மீகம் வேறு. மதவாதம் வேறு. ஆன்மீகம் என்பது எல்லா மதத்துக்கும் பொதுவானது. நாத்திகம் என்ற பெயரில் ஆத்திகத்தை சிதைக்க நடக்கும் முயற்சியால் கட்டுப்பாடு, தர்மம் எல்லாம் சிதைக்கப் பட்டு வருவதால் நடக்கும் சமூக அவலங்களை எல்லோரும் பார்க்கிறோம். எனவேதான் ஆன்மீக அரசியல் தேவை என்று கருதுகிறோம். ஆதரிக்கிறோம்.

தனியாக ஹஜ் புனிதயாத்திரை மேற்கொள்ளும் பெண்களுக்கு சலுகைகள் வழங்கியது பா.ஜனதா தானே. நாங்கள் மதவாதத்தை எதிர்க்கிறோம். ஆன்மீகத்தை ஆதரிக்கிறோம்.

இந்துமத தலைவர் ஒருவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டால் உடனே காவிதீவிரவாதம் பார்த்தீர்களா என்று வசைபாடுகிறார்கள். முத்தலாக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இஸ்லாமிய பெண்மணி பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறோரே. இதற்கு என்னசொல்ல போகிறார்கள்?

எது நடந்தாலும் பா.ஜனதா மீது பழிபோடகாரணம். எப்படியாவது பா.ஜனதா வளர்ந்து விட கூடாது என்ற பயம்தான் காரணம். இந்த திசை திருப்பும் அரசியல் மக்களிடம் வெகுநாள் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...