வீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்

திரிபுராவில் கடந்த 25 ந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 சட்ட சபை தேர்தலில் தோல்வியைத் தழுவி 4 முறை முதல்வராக இருந்துவரும் மாணிக் சர்கார் பதவியை இழக்கிறார்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகபலத்துடன் இருந்து வந்தது.  இந்நிலையில் இந்த மாநிலத்தின் தோல்வியின் மூலம் நாட்டில் கேரளாவில் மட்டும் ஆட்சி செலுத்தும் மோசமான நிலைக்கு இடதுசாரி முன்னணி தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இடதுசாரி முன்னணி பெரியளவில் சரிவை சந்தித்து வந்துள்ளது. 1996ஆம் ஆண்டில் பிரதமராகும் வாய்ப்பு அப்போதைய மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிபிஐ-எம் இதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.

* கடந்த 1996-2004 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நாட்டில் இடதுசாரிமுன்னணி வலுவாக காணப்பட்டது. அப்போது மக்களவையில் இடதுசாரி முன்னணிக்கு மொத்தம் 62 எம்.பி.,க்கள் இருந்தனர். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு இடதுசாரி முன்னணி ஆதரவு அளித்து வந்தது. இதன்பின்னர் சரிவை இடதுசாரி முன்னணி சந்தித்தது.

* கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி முன்னணி 24 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. இதற்குப் பின்னர் எழுந்த மோடி அலையில் இடதுசாரிக்கான ஆதரவு குறைந்தது. 2014 மக்களவை தேர்தலில் வெறும் 12 இடங்களில் மட்டுமே இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது. 4.8 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தது.

* 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5 சதவீத வாக்குகள் பெற்று 335 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 60 இடங்களில் வெற்றி பெற்று 24 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது.

* 2011ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்து வந்த மேற்குவங்க மாநிலத்தை திரிணமூல் கட்சிக்கு இடதுசாரி முன்னணி இழந்தது. இதற்குப் பின்னர் 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் மொத்தமுள்ள 294 இடங்களில் 211 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ், இடதுசாரி முன்னணி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 44 இடங்களிலும், இடதுசாரி முன்னணி 32 இடங்களிலும் வெற்றி பெற்றன.

* 2016ல் கேரளாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் இடது ஜனநாயக முன்னணி 91 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் இதுவரை காங்கிரஸ் அல்லது இடதுசாரி முன்னணிதான் ஆட்சி செலுத்தி வந்துள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...