தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம்

‘அரசியல் கட்சிகளிடம் ஒருமித்தகருத்து ஏற்பட்டால், எதிர்காலத்தில் நடக்கும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம்’’ என்று பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் முழுக்க முழுக்க மின்னணு இயந்திரங்களே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் குறிப்பிட்ட கட்சிக்கே (ஆளும் கட்சி) வாக்குகள் பதிவாகும்வகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்கிறது என்று சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பாமக உட்பட பல கட்சிகள் புகார்கள் தெரிவித்தன.

கடந்த 2017-ல் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளில், பாஜக 325 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற புகார் அதிகமானது.

ஆனால், மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப் பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும்மீண்டும் உறுதியாகத் தெரிவித்து வருகிறது.

எனினும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதில்மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கடந்த சனிக் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிலமணி நேரங்களில், இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் அதற்கு ஒருமனதாக ஒப்புக்கொண்டால், எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.

வாக்குச் சீட்டுக்குமாற்றாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன் படுத்தலாம் என்று அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். எனினும், வாக்குசீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என எல்லா அரசியல் கட்சிகளும் விரும்பினால், அனைவ ருடனும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...