இது சக்கரவர்த்தித் திருமகனின் ஸ்ரீராமனின் தேசம்..!!! இதை நிரூபித்தது ராமராஜ்ய ரதயாத்திரை…!!!
இந்த ஆடியோ ஒரு பதிவாக எடுக்கப்பட்டு, இன்று சமூக ஊடகங்களில் வைரலாக வலம் வந்தது.
தமிமுன் அன்சாரி கூறுவதாகத் தெரியும் இந்தக் கட்டளையின் படி பார்த்தால் முஸ்லிம்களின் உணர்வு, சமுதாயத்தின் குரல் என்றெல்லாம் வெளித் தெரிந்தால், மற்றவர்களின் ஆதரவு கிடைக்காது என்றோ, அல்லது தங்களது உள்நோக்கம் வெளிப்பட்டு விடும் என்றோ நினைத்துப் பதறுவது புரிகிறது.
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான், தமிழர்களின் குரலா? தமிழனுக்கும் ராமராஜ்யத்துக்கும் தொடர்பு இல்லை என்று, இஸ்லாமியர் ஒருவர் சொன்னால் அதை இந்தத் தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
எது தமிழன் பிரச்னை, எது தமிழ்ப் பிரச்னை? யார் தமிழர் என்று தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? ரத யாத்திரையை நிறுத்துவதுதான் சமூக நீதி என்று யார் சொன்னார்கள்? அதை எவர் தீர்மானிப்பது? ரத யாத்திரையைத் தடுக்க வேண்டும் என்று சொல்வதுதான் சமூக நீதி என்று எந்தப் பாடத் திட்டத்தில் எழுதி வைத்தார்கள்?
நம்ம ஊடகப் பிரிவில் சொல்லி வைங்க என்றால், எல்லா ஊடகங்களுமே அப்படித் தானே இருக்கின்றன..! தமிமுன் அன்சாரி என்ற எம்.எல்.ஏ., இந்தப் போராட்டத்தில் ஆவேசமாக ஈடுபட்டார் என்பதை வெளிப்படுத்துவதற்காக ஊடகங்கள் அந்த செய்திக் காட்சியைக் காட்டப் போக இப்போது அது எதிர்மறைச் சிந்தனையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாதது.
சட்ட சபையிலும் சாலை மறியலிலும் மீண்டும் மீண்டும் தமிமுன் அன்சாரி போட்ட ஆட்டத்தைக் காட்டப் போக, அது மக்களிடம் வேறு விதமாக சென்று சேர்ந்திருப்பதை அவரே உணர்ந்திருப்பதால்தான், அதை மறைக்க முயலுகிறாரோ என்று தோன்றுகிறது!
தென்காசியில் ஜவாஹிருல்லா கைது செய்யப் பட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்தனர்.
தென்காசி, கடையநல்லூர், பரமக்குடி என்று ரத யாத்திரை வந்த போது கோஷமிட்டவர்களும் அவர்கள் எழுப்பிய கோஷங்களும் என்ன என்பது ஆங்காங்கே சமூக வலைத்தளங்களில் உலவும் வீடியோக்கள் காட்டிக் கொடுக்கின்றன.
பரமக்குடியில் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்த யாத்திரையை எதிர்த்து, செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக், மா.கம்யூ., உள்ளிட்டவை.
நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதற்கு சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கும் ‘நம்ம’ ஊடக ஊதுகுழல்கள், ரத யாத்திரைக்கு 144 தடை உத்தரவு கிடையாதா என்று ஏக்கத்துடன் கேட்கின்றனர்!
ஆங்காங்கே போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தப்பட்டதால், இந்த ராமர் ரதம், இவர்கள் வார்த்தையில் சொல்லப் போனால் படம் வெச்ச லாரி, எங்கும் நிற்காமல் வேகமாகச் செல்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் யார் எனப் பார்த்தால், தமுமுக, விசிக, மமக, எஸ்டிபிஐ ஆகியோர்தான்
ஆகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல, இது மதசார்பற்ற நாடு. எல்லா மதத்தினருக்கும் அவரவர் வழிபாட்டை மேற்கொள்ள உரிமை உண்டு.
ஒரு சாதாரண முஸ்லிம் நடுப் பகலில் நடு சாலையில் அல்லது பொது இடத்தில், மார்க்கக் கடமையை நிறைவேற்ற தொழுகை மேற்கொள்கிறார். அதனை எவரும் தடுப்பதில்லை. சொல்லப் போனால் அதற்கு உதவியாக ஒரு ஹிந்து செயல்படுகிறார்.
ரயிலில் பயணிக்கும் போது தனது இடத்தை விட்டு எழுந்து, இஸ்லாமியரின் தொழுகைக்கு தன்னாலான உதவியைச் செய்கிறார். இஸ்லாமியர் இந்துக்கள் என்பது அவரவர் வழிபாடு, மதக் கோட்பாடுகள் சார்ந்த செயல்களால்தானே வெளித் தெரிகிறது.
இப்படி சமூக நல்லிணக்கம் பேணுவதை ஹிந்துக்கள் தங்கள் இயல்பாகவே பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பதிலுக்குக் கிடைக்கும் மரியாதை?
உண்மையில், பிரியாணி வாங்கி உண்டு பிரியமுடன் அமைதியாக ஒருவரை ஒருவர் அரவணைத்து இருக்கும் மாநிலத்தில் மதக் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
அது யார், எவர் என்பதை, திறனுள்ள தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் நிச்சயம் கண்டுபிடித்து குறிப்பெடுத்து வைத்திருக்கும்!
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.