தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது

உத்தரப்பிரதேசம் உன்னவ், காஷ்மீரின் கதுவாபகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் மோடி மவுனம்கலைத்து பேசியுள்ளார்.

கடந்த இருநாட்களாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் ஒருபண்பட்ட சமூகத்தில் நடந்த செயலாக இருக்க முடியாது. ஒரு நாடாக, சமூகமாக நாம் வெட்கப்பட வேண்டும். குற்றம்செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். முழுமையான நீதி என் மகள்களுக்கு நிச்சயம்கிடைக்கும் என உறுதிகூறுகிறேன் என மோடி ஆவேசமாகப் பேசினார்.

 டெல்லியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை பிரதமர்மோடி திறந்து வைத்தார். அந்தநிகழ்ச்சியில் எதிர்க் கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக, பிரதமர் மோடி  பேசியதாவது:

நாடுசுதந்திரம் அடைந்தபின் ஏராளமான அரசுகள் ஆட்சிக்கு வந்திருக்கலாம், சென்றிருக்கலாம். ஆனால், டாக்டர் அம்பேத்கரை போற்றும்வகையில் நாங்கள் (பாஜக) செய்த பணிகள்போல் யாரும் செய்ததில்லை. இந்த நினைவரங்கம் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப் படுகிறது.

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அரசுக்கு பின் வந்த காங்கிரஸ் அரசு இந்த நினைவரங்கம் அமைக்க வேண்டியது தொடர்பாக பாஜக அரசு தாயாரித்து வைத்திருந்த கோப்பு களையும், திட்டங்களையும் முடக்கி, மூடிவிட்டது.

ஆனால், 2014ம் ஆண்டு பாஜக அரசு பணிசெய்ய மக்கள் வாய்ப்பளித்தனர். அதன்பின் அந்தகோப்புகளையும், திட்டங்களையும் நாங்கள் மீட்டெடுத்து பணியாற்றினோம்.

கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின், தலித்மக்களுக்கு எதிரான குற்றங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருவாரியாக குறைத்து இருக்கிறது. தலித்மக்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதை அதிகப்படுத்தியுள்ளோம்.

ஆனால், காங்கிரஸ் அரசோ நாட்டின் வரலாற்றில் இருந்து அம்பேத்கர் பெயரை அழிக்கும் முயற்சில் தான் ஈடுபட்டது. அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், இந்த கசப்பான உண்மை உணர்ந்திருக்கும்.

பாபா சாஹேப் அம்பேத்கருக்கு மரியாதைசெய்யும் விதத்தில் காங்கிரஸ் செய்த ஒருபணியைச் சொல்லட்டும். இதை நான் சவால்விட்டுச் சொல்கிறேன்.

கடந்த இருநாட்களாக நாட்டில் பேசப்பட்டு வரும் துர்பாக்கியமான சம்பவங்கள், அறிவார்ந்த, பன்பட்டசமூகத்தில் நடந்திருக்க வேண்டிய சம்பவங்கள் இல்லை.

ஒரு நாடாக, ஒரு சமூகமாக நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும். நான் அனைவருக்கும் உறுதிகூறுகிறேன், தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மகள்களுக்கு நிச்சயமாக நீதிகிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்தசமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடவேண்டும். இந்தமாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

நமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் எங்காவது சென்று விட்டு தாமதாக வீட்டுக்குவந்தால், ஏங்கே சென்றாய் என்று கேட்கிறோம். அதே போலவே மகன்களும் இரவு நேரத்தில் தாமதமாக வந்தால் இதேகேள்வியை கேட்கிறோம். நாம் நமது குடும்ப முறையை வலுப்படுத்த வேண்டும். நமது சமூக மதிப்புகளையும், சட்டம் மற்றும் ஒழுங்கையும் வலிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...