18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்?

நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளாக ஆட்சிசெய்தும் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்? என காங்கிரஸ்கட்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கிராமங்களுக்கு தற்போது பாஜக ஆட்சியில் மின்சாரவசதி செய்து தரப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.27,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:


நாடு விடுதலை அடைந்த பல ஆண்டுகளுக்குபிறகு, நாங்கள் மின்சாரம் அளிக்கும்வரை இருளில் இருந்த 18,000 கிராமங்களிலும் வசதியானவர்களா இருந்தார்கள்? ஏழைகள்மீது அன்பு செலுத்துவதாகக் கூறிக்கொள்பவர்கள் இதற்கு பதில்சொல்ல வேண்டும்.


வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியிருந் தவர்களுக்கு இந்த ஏழைகள் 60 ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்தது குறித்து சிந்திக்கக்கூட நேரம் இருந்திருக்காது.


மின்சார வசதியற்ற கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மின்வசதியற்ற 4 கோடி வீடுகளுக்கு செளபாக்யா திட்டத்தின் கீழ் மின்வசதி அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த 4 கோடி குடும்பங்களில் 25 லட்சம் குடும்பங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்ததாகும் என்றார் மோடி.


ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு, முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.


சிண்ட்ரியில் மூடப்பட்ட யூரியா தொழிற்சாலையை மீண்டும் திறப்பது, பட்ராதுவில் 2,400 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின்நிலையம் அமைப்பது, தேவிகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலையம், ராஞ்சி மாநகர மக்களுக்கு எரிவாயு குழாய் வசதி ஆகியவை மோடி தொடங்கி வைத்த திட்டங்களாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...