பாலிமர் செய்திகள்: கேரளா, கூட்டுப் 'பாவமன்னிப்பு'… பாதிரியார்கள் விவகாரம்: போலீசில் புகாரளிக்க கத்தோலிக்க திருச்சபை தடை! பினராயி விஜயன் தலைமையில் இயங்கும் அரசு 'செக்யூலர்' – 'மதச்சார்பற்ற' அரசுதானே!
அந்த 'செக்யூலர்' அரசின் அங்கம்தானே மதச்சார்பற்ற போலீஸ்துறையும், மதச்சார்பற்ற நீதித் துறையும்?
கத்தோலிக்க திருச்சபைகளுக்கு, தங்கள் பாதிரியார் சம்பந்தப்பட்ட புகார்களை, தாங்களே விசாரித்துக்கொள்ள, ஏதேனும் சிறப்பு அதிகாரம், வழங்கியுள்ளதா பினராயி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு?
ஒருமடாதிபதியின் மீது புகார் வந்தால் பூட்ஸ் காலுடன், மடத்துக்குள் நுழைவது 'மதச்சார்பின்மை'!
கர்த்தரின் பெயரை சொல்லி கூட்டுப் 'பாவமன்னிப்பு' செய்ததாகப் புகார்வந்தால், அது கிறிஸ்தவ அமைப்பாக இருந்தால் தாங்களே 'ஒழுங்கு நடவடிக்கை' எடுத்து பிரச்னையை முடித்துக் கொள்வார்கள்! போலீஸ் தலையிடாது! நீதி மன்றம் உள்ளே வராது! 'திருச்சபை' தீர்மானித்து கொள்ளும்!
எங்கோ ஒருவேதம் ஓதிய மரபில் தப்பிப்பிறந்த தறுதலை தேவநாதன் என்ற கோயில் குருக்கள், கேவலமான காரியத்தில் ஈடுபட்டால், இந்த பெரியாரிய, மார்க்சீய, முற்போக்கூஸ், லிபரல்ஸ், நடுநிலை நக்கீஸ், எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொள்வார்கள்!
தப்பிப் பிறந்த அந்தத் தறுதலை தேவநாதன்தான், ஏதோ ஒட்டுமொத்த பிராமண குலத்தின் பிரதிநிதிபோல இவர்கள் சித்தரித்தார்கள். ஏதோ கோயில் குருக்கள் எல்லாம் அந்தப்பொறுக்கி தேவநாதனைப் போல இருப்பதாகச் சித்தரித்தார்கள்!
இன்று? "ஒரு தனி மனிதனின் ஒழுக்கமீறலுக்கு ஒட்டு மொத்த மதத்தையோ, இனத்தையோ பழிக்கக் கூடாது தோழர்!"-… அடிங்…… இதைத்தானேடா சித்ரகுப்தன் கோயில் குருக்கள் தேவநாதன் விஷயத்திலும் நாங்க சொன்னோம்! அப்ப இந்த நியாயம் எங்கேபோயிற்று?
சரி… எந்த பெண்ணுரிமை இயக்கமும் போராட்ட அறிவிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் எதுவும் செய்ய வில்லையே? எந்த ஜோல்னா பை, சோடாபுட்டி , குறுந்தாடி அறிவுஜீவியும் வாயே திறக்கவில்லையே?
எங்கோ கதிரா மங்கலத்தில், நெடுவாசலில் எரிவாயுக் குழாய் உடைந்து கசிந்தால் அது 'மோடி ஆட்சியில்' நடந்த சம்பவம்!எங்கோ ஒரு கிராம மூலையில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அது 'மோடி ஆட்சியில்' நடந்த சம்பவம்! ஏதோ ஒரு மாநிலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டால் அது 'மோடி ஆட்சியில்' நடந்த சம்பவம்!
ஆனால் இது 'பினராயி விஜயன் ஆட்சியில் நடந்தசம்பவம்' இல்லவே இல்லை! இது ஏதோ மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எந்தப் பொறுப்பும் இல்லாத, எங்கோ ஒரு 'திருச்சபை' யில் நடந்து போய்விட்ட 'ஒழுக்க மீறல்'- அவ்வளவுதான்!
"போலீஸ், கோர்ட் எல்லாம் எதுக்கு தோழர்…?" "
இதில் பெரிய நகைச்சுவை – அந்த 5 பாதிரிகளையும் திருச்சபை சஸ்பெண்ட் செய்துள்ளதாம்! அவர்கள் இனிமேல் ''இறை பணி''யில் ''ஈடுபட" முடியாதாம்! ஏதோ இத்தனை நாள் அவர்கள் "ஈடுபட்டது" என்னவோ "இறை பணி" போல!!
நன்றி முரளி சீதாராமன்
You must be logged in to post a comment.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
கேரள பாரதிய ஜனதா வழக்கி பதிவு செய்யப்பட ஆவன செய்ய வேண்டும்.நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உத்தரவு பெற முடியுமா ?