இனிய தீபாவளி நாள் நல்வாழ்த்துக்கள்

தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. பண்டிகை காலங்களில் வரும் விரதங்களை மேற்கொள்வதன் மூலம் சந்தோஷம் மட்டுமின்றி, மனஅமைதியும் கிடைக்கிறது.

இந்த வகையில் தீபாவளி பண்டிகை மிகவும் பிரசித்தமானது.

நாடு முழுவதும் வயது வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகை.

சாதாரணமாக அமாவாசையில் பல வழிபாடுகள் செய்வது இந்துக்களின் வழக்கம். துலா ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் அமாவாசையில்தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண பரமாத்வாவிடம் நரகாசுரன் கேட்ட வரத்துக்காக அவன் நினைவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

ராவணனை விஜயதசமி நாளில் வதம் செய்த ராமபிரான் வனவாசம் முடிந்து தீபாவளியன்றுதான் அயோத்தி திரும்பியதாக கூறப்படுகிறது.

அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளும் இதுதான்.

நம் மனதில் உள்ள கோபம், அகங்காரம், ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்கள் எரிந்துபோக வேண்டும் என்பதற்காக எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பட்டாசு, வாணவேடிக்கை, வெடி வெடித்து குடும்பத்துடன் உற்றார், உறவினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்வதே இதன் சிறப்பு அம்சம்.

தீபாவளி அன்று விரதம் முடித்து நோன்பு எடுப்பது முக்கிய நிகழ்வாகும். இந்த நோன்பு பரம்பரை பரம்பரையாக குடும்ப வழக்கப்படி செய்யப்படும் முக்கிய வழிபாடாகும். சிவனுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கவுரி விரதம் மிகவும் முக்கியமானதாகும். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து சிவனின் உடம்பில் ஐக்கியமாகி அர்த்தநாரியாக பாதி உடம்பை பெற்ற விரதமாகும்.

இந்த நோன்பு சரியாக ஐப்பசி மாத அமாவாசையில் வருகிறது. 21 நாட்கள் விரதம் இருந்து தீபாவளி அமாவாசையன்று விரதத்தை பூர்த்தி செய்வார்கள். தற்கால சூழ்நிலையில் அவ்வளவு நாட்கள் யாரும் கடைபிடிப்பதில்லை. தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு விரதம் இருந்து நோன்பு தொடங்குவார்கள்.

நோன்பு நிறைவேறும் தீபாவளி நாளில் கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கேற்றி பழவகைகள், பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் வைத்து படைப்பார்கள். அப்பமும், அதிரசமும்தான் இதில் முக்கிய இனிப்பு வகைகள் ஆகும். 21 அப்பம், 21 அதிரசம் வைத்து அதனுடன் நோன்பு கயிற்றையும் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, வந்திருப்பவர்களுக்கு பிரசாதமும், நோன்புக் கயிறும் கொடுத்து உபசரிப்பார்கள்.

பக்தி சிரத்தையுடன் கேதார கவுரி விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்யமும், சற்புத்திர யோகமும் உண்டு என்பது ஐதீகம். இந்த விரதம் மேற்கொண்டால் கணவன் & மனைவி இடையே மாறாத அன்பு என்னென்றும் நிலைத்திருக்கும். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அன்யோன்யம் அதிகமாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளி நன்னாளில் கேதார கவுரி விரத பூஜை செய்து சகல நலன்களும் மகிழ்ச்சியான வாழ்வும் பெறுவோமாக.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...