''மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கிகணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
திருச்சி ஜோசப் கல்லுாரியின், 175வது ஆண்டு துவக்கவிழா நேற்று நடந்தது. கல்லுாரி ரெக்டர் லியோனார்ட் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.கலெக்டர் ராசா மணி, பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் மணி சங்கர், ஜேசு சபை தலைவர் டேனிஸ் பொன்னையா முன்னிலை வகித்தனர்.
விழாவில், 175வது ஆண்டு விழா மலரை வெளியிட்டு, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: யு.ஜி.சி., துவங்கப்பட்ட போது, 20 பல்கலைக் கழகங்கள், 500 கல்லுாரிகள் இருந்தன. தற்போது, 900 பல்கலைக் கழகங்களும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லுாரிகளும் உள்ளன.நாடு சுதந்திரம் பெற்ற பின்னரே இந்தமாற்றம் ஏற்பட்டது. பணம் இல்லாததால் கல்வியை தொடர முடியவில்லை என்ற நிலை, எந்தவொரு மாணவனுக்கும் ஏற்படக் கூடாது என்பதில், பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
இதற்காகத்தான் பல லட்சம் மாணவர்கள் பலன்பெறும் வகையில், கல்வி உதவித் தொகைகள் வழங்கப் பட்டுள்ளன. கல்வி உதவித் தொகை, மாணவர்களை சென்றடைவதில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்க, டிச., 1ம் தேதி துவங்கி, ஒவ்வொரு மாதமும், அந்த மாணவனின் வங்கிக்கணக்கில், உதவித் தொகையை வரவு வைக்கும் திட்டம், நாடுமுழுவதும் அமல்படுத்தப் படவுள்ளது.
அரசு பள்ளிகளில் தலா, 20 லட்சம் ரூபாய் செலவில், 2,500, 'அடல்'ஆய்வகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆண்டுதோறும், 2,500 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.