சபரிமலை கோயிலுக்குள் பெண்கள்செல்லலாம் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஜன.,22 முதல் விசாரணை நடக்கும் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்துவயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்துருகின்றன. ஆனால் இந்துக்களின் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் பற்றி கவலைப்படாமல் கோர்ட் உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலஅரசு தீவிரமாக உள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவை எதிர்த்து 4 ரிட் மனுக்களும், உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி 49 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது இன்று (நவ.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுசீராய்வு மனுக்கள்மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் ஜன.,22 முதல் விசாரணை நடக்கும் எனவும், அதுவரை, கோயிலுக்கு பெண்கள்செல்லலாம் என்ற உத்தரவிற்கு தடை கிடையாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இது குறித்து கேரள மாநில பா.ஜ.க , தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், கோர்ட் முடிவை வரவேற்கிறேன். சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கக்கடாது என்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்ற நிலையில் உள்ளோம். பக்தர்களின் உணர்வுகளை அறிந்து சுப்ரீம்கோர்ட் மறு சீராய்வு செய்ய உள்ளது என்றார்.
மாநில பாஜ பொதுசெயலர் கே. சுரேந்திரன் கூறுகையில், அய்யப்ப பக்தர்களுக்கு ஆரம்பகட்ட வெற்றி கிடைத்துள்ளது. மறுசீராய்வு மனு மீதான விசாரணை முடிவில் சாதகமாக தீர்ப்புகிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இறுதிவரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தந்திரி கண்டராரூ ராஜீவரு கூறியதாவது: கடவுள் அய்யப்பன் ஆசிர்வாததால்தான் சுப்ரீம் கோர்ட் மறுசீராய்வு செய்ய முடிவுசெய்துள்ளது. பக்தர்கள் மனமுருகி வேண்டியதற்கு பலன்கிடைத்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை. கோர்ட்டின் முடிவால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கேரளவெள்ளம் மற்றும் கோர்ட் உத்தரவு நமக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நம்மை அய்யப்பன் காப்பாற்றி யுள்ளார்.
கோர்ட்டில் மீண்டும் விசாரணை என்ற முடிவு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஜன.,22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சபரிமலையில் மீண்டும் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும். இது அய்யப்பனின் வெற்றி. அவரதுசக்திக்கு தலை வணங்குகிறேன். ஆதரவு அளித்த அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் பிரார்த்தனையை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.