சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்துபோகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் வேணு கோபால் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்தவிழா ஒன்றில் பேசியவர், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு நமது நாட்டில் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக மிக ஆபத்தனது. இது அரசியலமைப்பு நெறிமுறையை சாகடிக்கும் அல்லது நாட்டின் முதல் பிரதமரான நேரு பயந்ததுபோல் சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறிவிடும் என்பது உண்மையாகி விடும்.
சபரிமலை வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது என்கிறார். ஆனால் மற்ற 4 நீதிபதிகளும் அரசியலமைப்பு அறநெறிகளின்படி தீர்ப்பு வழங்குகிறார். நீங்கள் ஒருதனிநபரை வைத்து வழக்கை கையாள்கிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களை பொருத்து கையாளப்பட வேண்டும். மதநம்பிக்கைகளில் தலையிடும் போது நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும். இதில் கோர்ட் தலையிடுவதை ஒட்டுமொத்த நாட்டுமக்களும் விரும்பவில்லை.
அரசியலமைப்பு நெறிமுறை என்பது அனைத்து அதிகாரங் களையும் கொண்ட பலமான ஆயுதம். அதை கவனமாக கையாளவேண்டும். ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்தும் முடிந்துவிட்ட பிறகும் அதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும்.
சபரிமலை வழக்கில் சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் இருவேறு குரல்களில் பேசி உள்ளது. இதில் அரசியலமைப்பு நெறிமுறை எங்கே உள்ளது. சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்களை நீர்த்து போக செய்வதாகவே உள்ளது. படிப்பறிவு குறைவாக இருந்தாலும் மக்களுக்கு தெரியும் தங்களுக்கு எது நல்லது என்று என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.