ரபேல் விவகாரம் செயற்கையாக உருவாக்கப் பட்ட சூறாவளி போன்ற பிரச்னை ஆக்கப் பட்டதன் பின்னணியில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லியில் பேசிய அவர், சர்வதேச கார்ப்பரேட்கள் நடத்தும் குழப்பத்தில் எங்களுக்கு பங்கில்லை. உங்களின் கார்ப்பரேட் பொறாமை அல்லது போட்டிக்காக இந்தியாவின் நலனை விட்டுக்கொடுக்க வேண்டுமா? 2012 ம் ஆண்டு முதல் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியால் இந்திய விமானப் படையின் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு நலனை சர்ச்சையாக்கி உள்ளது.
ரபேல் விமானம் வாங்குவதில் உண்மையான ரூ.59,000 கோடி ஒப்பந்தம் முன்னரே வெற்றி அடைந் திருந்தால் நாடு மிகப்பெரிய இலக்குகளை எட்டி இருக்கும். முந்தைய காங்., அரசு 10 ஆண்டுகளாக ஒப்பந்த விவகாரத்தில் எந்தமுடிவும் எடுக்காமல் வீணடித்துள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் நவீன போர்க் கருவிகளை பயன் படுத்த துவங்கியபோதும் எந்தமுடிவும் எடுக்கப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.