28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கிய ரிசர்வ் வங்கி

மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல்செய்த மத்திய அரசு, ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரிச்சலுகை, பிரதமர் கிசான்சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த சூழ்நிலையில், மத்திய வங்கியின் மத்திய வாரியக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்று, இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கிப்பேசினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு விடுத்த வேண்டு கோளின்படி, 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ்வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...