உ.பி.யின் பிரயாக் ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தவிழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக் கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்தவகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்தமாதம் 4-ம் தேதிவரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
கும்பமேளாவில் புனித நீராடு வதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக் கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு, சங்கம் படித்துறையில் மகா ஆரத்திவழிபாடு செய்து இந்தியமக்கள் நலனுக்காக பிரதமர் மோடி வேண்டிக் கொண்டார். இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கும்பமேளா இடத்தை சுத்தம்செய்த துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பலரது தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.