மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியேஅமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
திருச்சிக்கு திங்கள் கிழமை வருகை தந்தவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வட இந்தியாவில் பாஜக-வுக்கு அமோகவரவேற்பு உள்ளது. தென்னிந்தியாவில் மாநில கட்சிகளுக்கு அதிகசெல்வாக்கு உள்ளது. பெரும்பாலான மாநில கட்சிகள் பாஜக ஆட்சிக்கு வருவதற்கே ஆதரவைதரும். மாநிலக்கட்சிகள் ஆதரவு இல்லா விட்டாலும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளே பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும். தஞ்சாவூரில் தமாகா-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருகட்டங்களாக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன்.
மதுரை ஆட்சியர் மாற்றப்பட்டிருப்பதே தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறது என்பதற்குசான்று.
அண்மையில் தங்கம்வென்ற வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும்.
கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாக அந்த மாநில அரசு கூறிவருகிறது. எனவே, காவிரியில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலை காரணமாகக் கூறி தாமதிக்காமல் தேர்தல் ஆணையம் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். பயங்கரவாத செயல்களை ஒடுக்க இந்தியா எப்போதும் துணை நிற்க வேண்டும் என்றார் அவர்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.