ஊழல், முறைகேடு, பாலியல்தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. இதனையடுத்து மே 30-ம் தேதி புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், இந்தமுறை நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராகாந்திக்கு பிறகு பொறுப்பேற்ற முதல் பெண் நிதியமைச்சர் என்பதால் அவரது தலைமையில் நிதி அமைச்சகம் பல அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நிதியமைச்சகத்தின் விதி எண் 56-இன் கீழ் மூத்த அதிகாரிகள் சிலருக்கு நிதிஅமைச்சகம் சார்பில் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வருவாய்த்துறையில் ஆணையர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர், இரு பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிய வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவரும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகிள்ளார்.
மேலும் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒருஅதிகாரி பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |