நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புடைய முடிவு என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து உள்நாட்டு நிறுவனங் களுக்கான கார்ப்பரேட் வரியையும் 25.17 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளார். இது போல அக்டோபர் 1 முதல் தொடங்கப்படும் புதியநிறுவனங்களுக்கு 17.1 சதவீதம் வரியை நிர்ணயிபதாக அறிவித்தார்.
இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் அபாரமுன்னேற்றம் அடைந்துள்ளன. இருநாட்களாக சரிவுகண்ட சந்தைகள் ஒரேநாளில் தலைகீழாக மாறிவிட்டன.
இதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ” கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்புடையது. மேக்இன் இந்தியா திட்டத்துக்கு இது சிறந்த ஊக்கம் அளிக்கும். உலகம் முழுவதிலுமிருந்து தனியார் முதலீடுகளைக் கவரும். தனியார் நிறுவனங்களிடையே போட்டியை அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். முடிவாக 130 கோடி இந்தியர்களுக்கும் பரஸ்பர நன்மை விளையும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |