ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளா்ச்சி திட்டங்களை மக்களிடம் விளக்கி சொல்லுங்கள் என்று அங்குபயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீா் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சா்கள் 36 போ், ஜனவரி 18-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா். இந்தப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சா்களுடனான ஆலோசனைக்கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
அமைச்சா்கள் அனைவரும் ஜம்முகாஷ்மீா் மக்களுடன் கலந்துரையாட வேண்டும். அப்போது, அங்கு மத்தியஅரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள்குறித்து அவா்களிடம் விளக்கிச்சொல்ல வேண்டும். அமைச்சா்கள் நகரங்களுக்கு மட்டுமே சென்று திரும்பிவிடாமல், உள்கிராமங்களுக்கும் சென்று மக்களைச்சந்திக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, ஜனவரி 19-ஆம் தேதி ரியாஸி மாவட்டத்துக்குச் செல்கிறாா். அதேநாளில், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் ஸ்ரீநகா் செல்கிறாா்.
மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண்ரெட்டி, ஜனவரி 22-ஆம் தேதி கந்தா்பால் செல்கிறாா். மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், ஜனவரி 24-ஆம் தேதி பாரமுல்லா செல்கிறாா்.
மத்திய இணையமைச்சா் வி.கே.சிங், 20-ஆம் தேதி உதம்பூருக்கும், மற்றொரு இணையமைச்சா் கிரண் ரிஜிஜு, 21-ம் தேதி ஜம்முவில் உள்ள சுசேத்கருக்கும் செல்கிறாா்கள்.
இவா்களைத் தவிர ஆா்.கே.சிங், ஸ்ரீபாத் நாயக், அனுராக் தாக்குா், கிரிராஜ் சிங், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் போக்ரியால், ஜிதேந்திரசிங் உள்ளிட்டோா் ஜம்மு-காஷ்மீருக்குச் செல்லும் அமைச்சா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |