ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகளை இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். அதில், 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ரெப்போ வட்டிவிகிதம், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், விவசாயிகளுக்கு கடன்குறித்த பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நாட்டில் பணப் புழக்கத்தை பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை ஊக்குவிக்கும். இதன் மூலமாக சிறுவணிக நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் பயன் பெறுவர். இது அனைத்து மாநிலங்களுக்கும் உதவும்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |