தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ்

தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் 68, 607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். வழக்கம் போல் எதிர்க் கட்சிகள் அனைத்தும் குய்யோ முறையோ என்று கதறி கொண்டிருக்கின்றன. ஐயோ! மோடி அரசின் பெருநிறு வனங்களுக்கு ஆதரவான நிலையை பாரீர் என்று ராகுல் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வங்கிபயன்பாட்டு மொழியில் ‘write off’ என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல. ‘தள்ளி வைப்பு’ என்று அர்த்தம். ஆனால், வேண்டுமென்றே மக்கள் மத்தியில் தவறான கருத்தை கொண்டு சேர்ப்பது அரசியல் அநாகரீகம். ‘தள்ளிவைப்பு’ என்பது கடன் வழங்கப்பட்ட வங்கிகளின் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகிறது. வாராக்கடன்களாக அவை இருக்கையில் சொத்துக்களாக பிரதிபலிப்பதால் வங்கிகளின் இருப்புநிலை பலமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றன. அதிலிருந்து நீக்குவதன் மூலம் வரி சலுகைகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க செய்ய வழி செய்கிறது.

சொத்துக்கள் அதிகம் இருப்பதாக இருப்பு நிலை தெரிவிப்பதால், ஆவணப்படி பணம் இருந்தும் மக்களுக்கு மேலும் கடன் வழங்க முடியாத நிலையை உருவாக்குகிற காரணத்தினால் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகின்றன. சட்டரீதியாக வாராக்கடன்களை வசூலிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும், தள்ளிவைப்பு நடவடிக்கையின் மூலம் கடனாளியின் கடன் அடைக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகாது. கடனாளிகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேகமாக தொடரும். வசூலிக்கப்பட்டவுடன், அவை வங்கிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பு நிலையில் லாபமாக கருதப்படும்.

அதாவது ஒரு வங்கியின் இருப்புநிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட விகிதத்தில் கடன் கொடுக்கவேண்டும். ஆனால் பலவங்கிகள் அவ்வாறு செயல்படுவதில்லை. ஏனெனில் பல கோடிகள் வாராக்கடன்களாக இருந்து வந்தன என்பதே காரணம். ஆகையால், நான்கு வருடங்களுக்கு மேலும் அவை வராக்கடன்களாக இருந்தால் அதை இருப்பு நிலையிலிருந்து ‘தள்ளி வைத்து’ சொத்துக்களை குறைத்துக்கொள்வதன் மூலம் வரி சேமிக்கப்படுவதோடு, மேலும் மூலதனத்தை கொண்டு வந்து மக்களுக்கு கடன் வழங்க முடிகிறது. இதற்கிடையில் தள்ளிவைக்கப்பட்ட கடன்களை சட்டரீதியாக வசூலிக்கும் நடவடிக்கை தொடரும். வசூலிக்கப்பட்டவுடன் வங்கியின் கணக்கில் லாபமாக சேர்க்கப்படும்.

டிசம்பர் 3,2019 அன்றே, காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் மாநிலங்களவையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.ரூபாய் 80,893 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் வங்கிகளால் ‘தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ (Writeoff) என்றும் அந்த பட்டியலை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், அவை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில்

வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுளார். அது கடனாளிகளுக்கு பயனளிக்காது என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

‘தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் மற்றும் இதர எதிர் கட்சிகளை மக்கள் தள்ளுபடி செய்து தள்ளிவைப்பது நலம்.

நற்பணி G நாகராஜன் BA

சமூக ஆர்வலர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...