பிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதி

பிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதித் திட்டத்தில் பெண்கள், ஏழைகள், மூத்தகுடிமக்கள் விவசாயிகள் ஆகியோர் இலவச உணவுப் பொருள் மற்றும் நேரடிரொக்கம் என்று திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதியுதவித் திட்டத்தை விரைவுகதியில் அமல் படுத்தி அதனை மாநில, மத்திய அரசு கண்காணித்து வருகிறது அரசு.

42 கோடி ஏழை மக்கள் ரூ.53,248 கோடிவரை உதவி பெற்றுளனர்.

பிரதமர் கிசான்திட்டத்தின் முதல் தவணையாக 8.19 கோடி பயனாளிகளுக்காக ரூ. 16,394 கோடி ரூபாய் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் 20.05 கோடி பெண்களுக்கு ரூ.10,029 கோடி தொகை முதல் தவணையாக ஜன்தன் கணக்குகளில் செலுத்தப் பட்டுள்ளது.

ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20.62 கோடி பெண்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10,315 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

அதே போல் 2.81 கோடி முதியோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,814.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

2.3 கோடி கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,312 கோடி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவுதானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் 65.85 கோடி பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

ஜூன் 2020-ல் 7.16 மக்களிடையே 3.58 லட்சம் மெட்ரிக்டன்கள் உணவு தானியங்கள் சென்றடைந்துள்ளன. 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்பு மாநிலங்களுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப பட்டுள்ளன. பிரதமர் நலத் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 9.25 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக்செய்யப்பட்டு 8.58 கோடி இலவச சிலிண்டர்கள் விநியோகிக்க பட்டுள்ளன.

இபிஎஃப்ஓ உறுப்பினர்களில் 16.1 லட்சம் பேர் திருப்பிச் செலுத்த வேண்டியதல்லாத முன் தொகையாக ரூ.4,725 கோடி ஆன் லைன் மூலம் எடுத்துள்ளனர். ரூ.28,729 கோடி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் பங்களிப்பில் 24% தொகை 59.23 லட்சம் ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் தொகை ரூ.895.09 கோடி.

இவ்வாறு நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...