புதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விகொள்கை, புதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளமாக இருக்கும்; இதை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நம் நாட்டில், 34 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளைகேட்டு, பல்வேறு புதுமையான அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த கல்வி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல்அளித்தது. ஐந்தாம் வகுப்புவரை, மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி கற்பிப்பது உள்ளிட்ட சில அம்சங்கள், அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த புதிய கல்விகொள்கை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘புதிய கல்வி கொள்கையால் உயர்கல்வியில் ஏற்படும் சீர்திருத்தம்’ என்ற தலைப்பிலான மாநாடுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலை மானியகுழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்தமாநாட்டை துவக்கிவைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: புதியகல்வி கொள்கை குறித்து, நாடுமுழுதும் இருந்து பல தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்; இது வரவேற்கத்தக்க விஷயம். இதனால், நாட்டின் கல்விஅமைப்பு மேம்படும். பெரும்பாலானோர், இந்த கல்வி கொள்கையை வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், கல்வி கொள்கையில் பாகுபாடு இருப்பதாகவோ, ஒருசார்புடன் இருப்பதாகவோ, யாருமே கருத்து தெரிவிக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கல்வி கொள்கையின் முக்கிய அம்சமே, மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை, தங்கள் தாய்மொழியில் கல்வி கற்பது தான். இதன் வாயிலாக, குழந்தைகள், பாடங்களை முன்பைவிட, மிக நன்றாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இளம் வயதிலேயே பாடங்களை தெளிவாக படிப்பதன் வாயிலாக, எதிர் காலத்தில் அவர்கள் மிகஉயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும். அடுத்த கட்டமாக, இந்த கொள்கையை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தான், மிகப் பெரிய கேள்வியாக உள்ளது; இது, ஒருசவாலான விஷயமாகவே இருக்கும்.

இந்த கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தவிஷயத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் நேரடியாக இந்த கல்வி கொள்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளீர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், புதியகல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த ஆதரவு தந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அதை அமல்படுத்துவதற்கு, நான் முழு ஆதரவு அளிப்பேன். இந்த விஷயத்தில், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

நம் நாட்டில் பல ஆண்டுகளாக கல்விகொள்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், புதியவற்றை கற்பதற்கான ஆர்வம், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்கும் தன்மை ஆகியவற்றை இழந்து விட்டோம். அதற்கு பதிலாக, ஒரு மந்தை தனத்துடன் செயல்படும் சமூகமாக மாறிவிட்டோம். புதிய விஷயங்களை சிந்திப்பதற்கான தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கல்வி கற்பதற்கான நோக்கம் இல்லாவிட்டால், இளைய சமுதாயத்தினரால், புதிய கண்டு பிடிப்புகளுக்கான திறனை வளர்த்துக் கொள்ள முடியாது. நம் நாட்டை, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு, புதிய கல்விகொள்கை மிகவும் முக்கியம். நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல, சீர்திருத்தமே சரியான வழி. அதற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் .புதிய இந்தியாவை அமைப்பதற்கான அடித்தளமாக புதிய கல்வி கொள்கை இருக்கும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கவேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

எப்படி சிந்திக்க வேண்டும்?

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று நடந்த மாநாட்டில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் மேலும் பேசியதாவது:கல்வி கொள்கையில் மாற்றங்கள் தேவை என்பதை, தற்போதைய மாறிவரும் உலக நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. கல்வியை பொறுத்தவரை, ‘என்ன சிந்திக்க வேண்டும்’ என்பதற்கு தான், இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்தோம். ஆனால், புதிய கல்வி கொள்கையில், ‘எப்படி சிந்திக்க வேண்டும்’ என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது, ‘டிஜிட்டல்’ யுகம். மாறிவரும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும், வாய்ப்புகளை எளிதாக அடையும் திறமை மிக்கவர்களாகவும் மாற்றுவதை, புதியகல்வி கொள்கை உறுதி செய்கிறது. தனி நபர்கள், பல ஆண்டுகளாக, வாழ்க்கைமுழுதும் ஒரு தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றவேண்டும். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு தனி நபரின் திறமையையும் மேம்படுத்து வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

‘திறமையுடன் கூடிய, மனித நேயமிக்க உள்ள சமுதாயத்தை உருவாக்குவதே, கல்வி கொள்கையின் நோக்கமாக இருக்கவேண்டும்’ என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார்.நம்நாட்டுக்கு மிகச்சிறந்த மாணவர்கள், தொழில் நிபுணர்கள், மனிதநேய மிக்கவர்களை உருவாக்கி தருவதே, புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சம். இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...