பிரணாப் முகர்ஜி ஒரு வரலாறு

பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள மிரடி எனும் சிறுகிராமத்தில் 1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். அரசியல், வரலாறு மற்றும் சட்டத்துறையில் பட்டங்கள் பெற்றவர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரணாப், காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசில் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்தவர்.

மத்தியஅரசில் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்தவர். அவர்வகிக்காத மத்திய அமைச்சக பொறுப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரதுபணி அளப்பரியது.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு பிரணாப் கல்லூரிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.5 முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய பட்டவர்.

ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என பன்முகத்திறன் கொண்டவர்.1982-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசில் நிதியமைச்சராக பதவிவகித்தவர். 47 வயதில் மத்திய நிதியமைச்சர் பொறுப்பை பிரணாப் ஏற்ற போது, நாட்டின் மிக இளம்வயது நிதியமைச்சர் என்ற பெருமையும் பிரணாப்புக்குக் கிடைத்தது.

2009-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மீண்டும் பிரணாப்முகர்ஜிக்கு மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிரணாப்முகர்ஜி, 2012 முதல் 2017ஆம் ஆண்டுவரை நாட்டின் குடியரசுத் தலைவராக பதவிவகித்தார்.

50 ஆண்டுகால அரசியல் அனுபவம்கொண்ட பிரணாப் முகர்ஜிக்கு 2008-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிகஉயரிய விருதான பாரதரத்னா விருது வழங்கி மோடி தலைமையிலான மத்தியஅரசு கௌரவித்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...