வேளாண் சட்டதிருத்தத்தால், நமக்கு நன்மை தான்

வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை, விவசாயிகள் நன்குபுரிந்துள்ளனர்; ஆனால், அவர்களை குழப்பி, பொறுப்பில்லாத அரசியலில், எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கை, நீண்டகாலமாக நிலுவை யில் இருந்தது. இந்த சட்டங்களில், தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்காரணமாக, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை, யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும்.

உள்ளூர், வெளிமாநிலம் என, எங்கேயும் விற்பனை செய்யலாம்.அதற்கு என்ன விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற உரிமையும், சுதந்திரமும், இந்தசட்டங்களின் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசின் ஒழுங்குமுறை சந்தைகளில், விவசாய பொருட்களை விற்பனைசெய்தால், 8.5 சதவீத வரி, விவசாயிகள் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், இடைத்தரகர்களுக்கு பணம்வழங்க வேண்டும்.இந்த சந்தைகளை தவிர்த்து, வெளியே விற்பனைசெய்தால், விவசாயிகள் வரிசெலுத்த தேவை இல்லை, இதனால், அவர்களுக்கு கூடுதல் விலைகிடைக்கும்.அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் செய்ததிருத்தங்கள் வாயிலாக, பொருட்களின் விலை உயராது.

இதனால், பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் எந்தபாதிப்பு ஏற்படாது. 25 ஆண்டுகளாக, வேளாண் நிபுணர்கள் கூறிவந்த மாற்றங்கள், தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கும் நடைமுறை தொடரும்.முந்தைய ஆட்சிகளில், நெல் மற்றும் கோதுமைக்கு மட்டுமே, ஆதார விலை வழங்கப்பட்டு வந்தது.

குறைந்தபட்ச ஆதாரவிலை பட்டியலில் உள்ள, இதர, 20 பயிர்களுக்கு வழங்கப் படவில்லை. ஆனால், தற்போது கேழ்வரகு, கடலை, பருப்பு வகைகள் உட்பட, பட்டியலில் உள்ள அனைத்திற்கும், குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கப்படுகிறது.பேச்சுகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ‘வேளாண் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்படும்’ என, கூறப்பட்டு உள்ளது. அதை, தற்போது மேற்கொண்டபோது, அவர்கள் எதிர்க்கின்றனர்; மக்களை ஏமாற்றுகின்றனர்.

சட்டதிருத்தத்தால், நமக்கு நன்மை தான் என, விவசாயிகள் நன்கு புரிந்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தவறாக கூறி, அவர்களை குழப்பி, பொறுப்பில்லாமல் அரசியல் செய்கின்றனர்.சட்டதிருத்தங்கள் வாயிலாக, இனி, வேளாண் பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும். இதனால், பொருளாதார வளர்ச்சியில், முன்னேற்றம் ஏற்படும். தமிழகத்தில், கரும்பு விவசாயிகளுக்கு பிரச்னை உள்ளது.இதுதொடர்பாக, நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம்.

மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...