மத்திய அரசின், பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள குழந்தைகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று உரையாடினார்.
அப்போது, கொரோனா தொற்றுபரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், அனைவரும் கைகழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட குழந்தைகளை, அவர் வெகுவாக பாராட்டினார்.புதிய கண்டுபிடிப்புகள், சமூகசேவை, வீரதீர செயல்கள், கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறைகளில் சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் அமைப்பின் சார்பில், பால சக்தி புரஸ்கார் விருதுகளை, மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.
கடந்த ஆண்டுக்கான பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, 32 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின், 75வது சுதந்திரதினத்தை, நாம் விரைவில் கொண்டாட உள்ளோம். இந்தநேரத்தில், இந்த நாட்டுக்காக என்ன செய்யமுடியும் என்பதை, இளைய தலைமுறையினர் சிந்திக்கவேண்டும்.கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், இந்த விருதுகளை வென்றிருக்கும் நீங்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகிறீர்கள்.துாய்மை இந்தியாதிட்டம் மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில், கைகழுவுவதன் அவசியம் குறித்த உங்கள் விழிப்புணர்வு பிரசாரங்கள், மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.
நீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும். முதலாவது, உங்கள் செயல்களில் வேகம் குறையாமல், எப்போதும் நிலையான தன்மையை பின்பற்றவேண்டும்.இரண்டாவது, இந்த நாட்டுக்காக நாம் உழைக்க வேண்டும். நம் அனைத்து பணிகளிலும், நாட்டின் நன்மை குறித்த அக்கறை இருக்கவேண்டும். அப்படியிருந்தால், நாம் செய்யும் பணிகள், பெரிய உயரத்தைதொடும்.
மூன்றாவது, எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், பணிவாக இருக்க பழகவேண்டும். இந்த குணம் இருந்தால், மற்றவர்களும் நம்முடன் சேர்ந்து, நம் வெற்றியை கொண்டாடுவர்.இவ்வாறு, பிரதமர் கூறினார்.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, பிரசித்தி சிங், 7, என்ற சிறுமி, எட்டு அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு பொதுஇடங்களில், 9,000க்கும் மேற்பட்ட, பழ மரங்களை நட்டுள்ளார். இதன்வாயிலாக, ஆயிரக்கணக்கான பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு உணவு ஆதாரத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரசித்தி சிங்கின் இந்தமகத்தான பணியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |