”சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,” என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.அம்பேத்கரின், 130வது பிறந்தநாளான நேற்று, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்டபல்கலைக்கழகத்தில், புதியகட்டட துவக்க விழா நடைபெற்றது.இதில், மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்டோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பாப்டே பேசியதாவது:இன்றைய நிகழ்ச்சியில், எந்தமொழியில் உரையாற்றுவது என்பது குறித்து, காலையில் தீவிரமாக யோசித்தேன்.
இன்றைய தினம், அம்பேத்கரின் பிறந்ததினம். அது நினைவுக்கு வந்ததும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம்பேசும் மொழிக்கும், பணியின்போது நாம் பயன்படுத்தும் மொழிக்கும் நீண்டநாட்களாக உள்ள முரண்குறித்து நினைவு வந்தது.
இதை அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்துள்ளார். எனவே தான், அவர் சமஸ்கிருதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க பரிந்துரைத்தார்.வட மாநிலத்தவர்கள், தமிழ்மொழியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென் மாநிலத்தவர்கள், ஹிந்தியை தேசியமொழியாக ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார்.சமஸ்கிருதத்திற்கு இரு பகுதிகளிலும் பெரும் எதிர்ப்பு இருக்காது என்பதால் இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |