உச்சிப் பிள்ளையார்

உச்சிப்பிள்ளையார் திருச்சி நகரில் ஐநூறு படிக்களுக்கும் அதிகமான அளவு உயரத்தில் ஒரு பாறை மலை மீது அமர்ந்து உள்ளவரே உச்சிப்பிள்ளையார் . 15 ஆம்நூற்றாண்டை சார்ந்ததாக கூறப்படும் இந்த ஆலயம் பல்லவ மன்னன் ஒருவரினால் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயம் உள்ள பாறை மலையின் சிறப்பைக் குறிப்பிட வேண்டும் எனில் அது சுமார் 3500 ஆண்டுகளுக்கும் முன்னர் அமைந்துள்ள பாறை மலை எனவும் , இமய மலையை விட பழமையானது எனவும் கூறுகின்றனர்

உச்சி பிள்ளையார் அமைந்துள்ள மலையின் அடியில் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரு பல்லவர் காலத்தை சேர்ந்த மானிக்க வினாயகர் ஆலயம் ஓன்றும் உள்ளது. மலைக்கு மத்தியில் தாயுமானவர் என்ற சிவன் ஆலயம் உள்ளது. சிவன் ஆலயத்தில் நூறுதூண்கள் உள்ளன. மேற்கூறை தங்கத்தினால் வேயப்பட்டு உள்ளது. மலை உச்சியில் பிள்ளையார் கோவில் உள்ளது. உச்சிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து உறையூருக்குச் செல்ல பண்டைய காலத்தில் இருந்த மன்னர்கள் சுரங்க வழிப்பாதையை அமைத்து இருந்ததாகவும் , அந்த வழி தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர் .

உச்சி பிள்ளையார் வந்த கதையும் , தாயுமானவர் என்ற சிவனார் ஆலயம் எழுந்த கதையும் சுவையானது.

உச்சிப் பிள்ளையார் ஆலயம் எழுந்த கதை இராமாயண காலம் அது. இலங்கைக்குச் சென்று இராவணனை வதம் செய்துவிட்டு இராம பிரான் அயோத்திக்குத் திரும்பினார் . பட்டாபிஷேகம் நடந்தேறியது. அதில் கலந்து கொள்ள இராவணனின் சகோதரன் விபீஷணரும் வந்திருந்தார். பட்டாபிஷேகம் முடிந்த பின் இராமனிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டுதன் நாட்டிற்குத் திரும்பிய விபீஷணருக்கு இராமபிரான் தனது அன்புப் பரிசாக ஒரு ஸ்ரீரங்கனாதர் சிலையை தந்திருந்தார் .

அந்த விக்கிரகம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் மகாவிஷ்ணுவே ஒரு விமோசனத்திற்காக அமர்ந்திருந்ததாக ஒரு கதை உண்டு. அதை "விபீஷணனிடம் இராமபிரான் தந்தபொழுது எந்த காரணத்தைக் கொண்டும் அதை பூமியில் வைத்து விடக்கூடாது எனவும் , அப்படி வைத்துவிட்டால் அதை மீண்டும் எடுத்துப் போகமுடியாது" எனவும் கூறி இருந்தார் .

ஆனால் இராமபிரான் அந்த சிலையை அவரிடம் தந்தது தேவர்களுக்கு பிடிக்கவில்லை ஒரு அசுரனிடம் சக்தி வாய்ந்த மகாவிஷ்ணுவின் விக்கிரகம் இருக்கலாமா என கோபமுற்றனர் . வினாயகரிடம் சென்று அவரிடம் அதைப்பற்றிக் கூறி அவனிடம் இருந்து அதை பறித்துக் கொள்ள வேண்டும் என வேண்டினர் . வினாயகரும் அவர்களை சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தார் . அதற்கு ஒரு பின்ணனிக்காரணம் இருந்தது அவருக்கு மட்டுமே தெரியும் .

அது என்ன எனில் அதற்கு பல காலம் முன்பு அந்த காவிரி ஆற்றின் கரையில் மகாவிஷ்ணு தவத்தில் அமர்ந்து இருந்தார் . தவம் முடிந்து வைகுண்டத்திற்கு திரும்பிப்போக வேண்டும் . அப்போது அவர் மனம் நினைத்தது. ‘இத்தனை ரம்மியமான இடத்தில் நான் வந்து தங்கினால் மனதிற்கு எத்தனை சுகமாக இருக்கும்’. அப்பொழுது அங்கு தங்கி இருந்த வினாயகர் அவருடைய ஏக்கத்தின் தன்மையை புரிந்து கொண்டு அவரிடம் வந்து மகாவிஷ்ணு அங்கு வந்து தங்க தாம் தக்க சமயத்தில் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதிதந்திருந்தார் . மகாவிஷ்ணுவின் ஏக்கத்தை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டது. அது அப்பொழுது நடக்க இருந்தது என்பது எவருக்கும் தெரியாது.

அயோத்தியை விட்டுப்புறப்பட்ட விபீஷணர் திருச்சி நகரை வந்தடைந்தார் . அப்பொழுது காவிரி அனைத்து இடத்திலும் ரம்மியமாக ஓடிக்கொண்டு இருந்தது. பக்கத்திலே பாறை மலை சூழ்ந்த வனப்பகுதி இருக்க அந்த ஆற்றுக்கரை வழியே சென்ற விபீஷணனுக்கு ஒரு ஆசை தோன்றியது. இந்த காவிரி ஆற்றில் முழுகிக் குளித்தால் எத்தனை இதமாக இருக்கும் . அதை எதிர்பார்த்த அந்த இடத்தின் அருகில் ஒரு சிறுவன் உருவில் வினாயகர் காத்திருந்தார் .

விபீஷணன்தான் அந்த நதியில் குளித்துவிட்டு வரும் வரையில் அந்த விக்கிரகத்தை வைத்துக் கொள்ள எவராவது கிடைப்பார்களா எனத் தேடிய பொழுது தூரத்தில் சிறுவன் உருவில் நின்று கொண்டு இருந்த வினாயகர் தென்பட அவரை அழைத்து அந்த விக்கிரகத்தை பூமியில் வைத்துவிடாமல் தான் குளித்து விட்டு வரும்வரையில் வைத்திருக்க முடியுமா என கேட்டார். வினாயகரும் அதை வைத்துக் கொள்வதில் தமக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் ஆனால் தான் அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததினால் சில மணி நேரம் மட்டுமே அதை வைத்திருக்க முடியும் என்றும் , நேரமாகிவிட்டால் தான் அவரை அழைத்தவுடன் உடனே அவர் கிளம்பி வராவிடில் விக்கிரகத்தை கீழே வைத்துவிட்டுச் சென்று விடுவேன் எனவும் கூறினர் .

அவர் கொடுத்த அவகாசம் போதுமானதாக இருந்ததினால் விபீஷணன் அந்த விக்கிரகத்தை அவரிடம் தந்து விட்டு நதியில் குளிக்கச் சென்றார் . நதிக்குள் இறங்கியவர் குளிப்பதில் இருந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தார் . வினாயகர் கொடுத்த கெடு தாண்டியதும், வினாயகர் எத்தனை குரல் கொடுத்தும் விபீஷணன் , வராததினால் அந்த விக்கிரகத்தை கீழே வைத்துவிட்டு வினாயகர் செல்லத் துவங்கினார் . அவர் அந்த விக்கிரகத்தை கீழே வைத்தப் பின்னர் தான் அவர் அழைத்தது விபீஷணர் காதில் விழுந்தது. கரையேறி ஓடிவந்தார் . பூமியில் சிலை இருந்தது. அதை எடுக்க முயன்றார் . ஆனால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

கோபமுற்ற விபீஷணர் அந்த சிறுவனைத் தேடினார் . மலை உச்சி மீது ஏறி சென்று கொண்டு இருந்தவரை துரத்திப் பிடித்தார் . சிறுவன் உருவில் இருந்த வினாயகரோ தன் பக்கத்து நியாயத்தை எடுத்துக் கூறியும் அதைக் கேட்காமல் அவருடைய தலையில் ஓங்கி அடித்தார் விபீ ஷணர் . அவ்வளவுதான் வினாயகர் தன் சுய ரூபத்தைக் காட்ட, அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினர் விபீஷணன். வினாயகரும் அவனை மன்னித்து இலங்கைக்கு அனுப்பிவைத்தார் . பின்னர் தானே அந்த இடத்தில் பல காலம் பொறுத்து சுயம் புவாகத் தோன்ற அவருக்கு அங்கு ஆலயம் அமைந்தது. வினாயகர் ஸ்ரீரங்கனாதர் சிலையை வைத்த இடத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் எழுந்தது. மகாவிஷ்ணுவிற்கு வினாயகர் தந்திருந்த வாக்குறுதியும் நிறைவேறியது.

தாயுமானவர் ஆலயம் எழுந்த கதை

காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியில் இரத்னாவதி என்ற ஒருவள் வாழ்ந்து கொண்டு இருந்தாள் . அவள் சிவபெருமானின் பக்தை. ஒரு முறை நிறை மாதக்கற்பிணியான அவளுக்கு பிரசவவலி எடுத்தது. அதை கேள்விப்பட்ட காவிரியின் அடுத்தக் கரையில் இருந்த அவளுடைய தாயார் அவளுக்கு உதவி செய்யக்கிளம்பி வந்தாள் . துரதிஷ்டவசமாக அன்று காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்தது. அவளால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அவளுடைய கணவரும் வர முடியாமல் போய்விட்டது. பிரசவ வேதனையில் அந்தப் பெண் துடிக்கலானாள் . நேரம் கடந்தது. திடீரென அவளுடைய தாயார் உருவில் ஒரு மூதாட்டி அங்கு வந்தாள் , அவளுக்குப் பிரசவம் பார்த்து விட்டுத் திரும்பிச்சென்று விட்டாள் . நல்ல குழந்தைப் பிறந்தது. அவளுடைய கணவரும் , அவளுடைய தாயாரும்; வெகு நேரம் பொறுத்து அங்கு வந்து சேர்ந்தார்கள். அதற்குள் அவளுக்கு சுகப்பிரசவம் ஆகி இருந்தது.

வந்தவர்கள் அவளுக்கு அவளுடைய தாயார் முன்னமே வந்து பிரசவம் பார்த்துவிட் டுச் சென் று விட் டாளே என்ற செய்தியைக் கூற, அவளுடைய தாயார் தான் அப்பொழுதுதான் அங்கு வந்ததாகவும் அதற்கான காரணத்தையும், கூற அவைரும் வியந்தனர் . அப்படியானால் தாயார் தோற்றத்தில் வந்தது யார் ? அனைவரும் குழம்பி நின்றவாறு கடவுளை வணங்கி நிற்க, அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி தான் தான் தன்னுடைய பக்தையான இரத்தினாவதிக்கு பிரசவம் பார்த்தேன் என்ற உண்மையைக் கூற அவருடைய கருணையை எண்ணி மனம் மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினர் . அவர் தாயாகவே அங்கு வந்து உதவியதால் , தாயும் ஆனார் என்பதைக் குறிக்கும் வகையில் அவருக்கு அங்கு தாயுமானவர் என்ற ஆலயம் எழுப்பினர் .

அந்த காட்சி ஆலயத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. ஏழாம் நூற்றாண் டில் சோழ மன்னர்கள் அந்த மலைப் பிரதேசத்தில் ஒரு கோட்டையைக் கட்டி பெர்ஷியர்களின் படை எடுப்பில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர் . அதன்பின் மதுரையின் நாயகர்கள் வசமும், ஆங்கிலேயர் வசமும் அந்த மலைக்கோட்டை கை மாறியதினால் அதை ராக்பார்ட் மலை எனப் பெயரிட அந்தப் பிள்ளையாரும் ராக்பொர்ட் பிள்ளையார் என்றே அழைக்கப்பட்டார் . ஒவ்ஒரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சூரியனின் ஒளி அந்த வினாயகர் மீது விழுவதினால் சூரியனே நேரில் வந்து வினாயகரை வணங்குவதாக ஐதீகம் உள்ளது.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.