இந்திய சரித்திரத்தின் கடந்தகால வாழ்வை, கலாச்சாரத்தை, பண்பாட்டை எளிய மக்களின் வாழ்வை மிகநுட்பமாக எழுதியுள்ள குறிப்பிடத் தக்க பயணக் கட்டுரையாளர்களில் ஒருவர் யுவான் சுவாங். தனது வாழ்நாளில் 17 வருடங்கள் பயணத்தில் கழித்திருக்கிறார். இவர் கடந்த தூரம் 20ஆயிரம் மைல்களுக்கு மேல். யுவான்சுவாங் சிறுவயதில் துறவியாக மாறியவர்.
கி.பி. 629ம் வருடத்தில் ஒரு நாள் இரவு புத்தர் ஞானம் பெற்ற கயாவின் போதிமரத்தின் அருகே தான் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பதாக கனவு வந்தது. அந்த கனவின் மீது ஏற்பட்ட ஆசையின் காரணமாகவே இந்தியாவுக்கு யுவான்பயணம் மேற்கொண்டார். அவரது இந்த முயற்சிக்கு மூத்த துறவிகளின் கடும் எதிர்ப்பு, தடையையும் மீறி அவர் மாறுவேடத்தில் குதிரையில் ஏறி இந்தியா நோக்கி பயணித்தார். சீனாவில் இருந்து இந்தியா செல்ல வரைபடங்கள் எதுவுமில்லை. குத்து மதிப்பாக மேற்கு நோக்கி பயணம் செய்தார். வழியில் சீதோஷ்ணநிலை, உடல்நலக்குறைவு, வழிப்பறி, பசி என பலகஷ்டங்களை அனுபவித்தார்.
கோபி பாலைவனத்தை கடக்கும்போது வழிதவறி மணல்வெளியில் அலைந்தும், குதிரையோடு தன்னை சேர்த்துக் கட்டிக்கொண்டார். குதிரை பாதை அறிந்தது போல் ஒரே திசையில் போய்க்கொண்டு இருந்தது இரண்டு இரவு, இரண்டு பகல் கடந்த பின் ஒருபாலைவனச்சோலை அடைந்து அங்கிருந்த ஈச்சம்பழங்களையும் தண்ணீரையும் சாப்பிட்டார். பின் பலமாதங்கள் மணற்வெளிபரப்பில் தனிஆளாக கடந்து தர்பான் நகர் வந்தார்.
பாலைவனத்தைப் பத்திரமாக கடக்க, தர்பான் மன்னர் யுவான் சுவானுடன் பாதுகாவலர்களை அனுப்பிவைத்தார். ஆனால் இடையில் வழிப்பறி கொள்ளையர்கள், பாதுகாவலர்களை கொன்றுவிட மீண்டும் எல்லாவற்றையும் இழந்து இரண்டு வருடங்கள் மற்றொரு குதிரையின் துணையோடு பயணித்து கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாமீது கொண்ட ஆர்வத்தால் அவர் சமஸ்கிருத மொழி கற்றுக் கொண்டார். பின்னர் பல வேத, உபநிஷத்து சாரங்களை சீன மொழியில் மொழி பெயர்த்தார். யுவான்சிங் இந்தியா வந்ததும் இந்தியாவில் இருந்து சீனா திரும்பியதும் சாதாரணமானவை அல்ல. அது இன்றளவும் சாகசப்பயணமாக உலக வரலாற்றில் கருதப்படுகிறது.
நன்றி ; அக்கப்போர்
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.