குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றிபெறும் , தேர்தல் முடிவுகள் வெளி வரும் நாளான டிசம்பர் 20ம் தேதிதான் குஜராத்திற்கு மற்றொரு தீபாவளி என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
தீபாவளிக்கு மறுநாள், குஜராத் மாநிலத்தின் புத்தாண்டுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை யொட்டி, மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், முதல்வர் மோடி குறிப்பிட்டிருப்பதாவது , குஜராத் மக்கள், மாநிலத்தை இருளின்பாதைக்கு கொண்டுசெல்ல ஒரு போதும் விரும்பமாட்டார்கள். வளர்ச்சிப்பாதையில், கடந்த 11 ஆண்டு காலமாக கொண்டுசென்றுள்ள தனது பணியை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அவர்கள் தீர்மானித்து உள்ளனர். விரைவில் நடைபெற இருக்கும் சட்ட சபை தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தீப ஒளித் திருநாளான தீபாவளியை தற்போது கோலாகலமாக கொண்டாடிமுடித்துள்ள குஜராத்மாநில மக்கள், டிசம்பர் மாதம் 20ம் தேதி, மீண்டும் பிரமாண்டமான தீபாவளியை கொண்டாட உள்ளனர். அது, ஜனநாயக தேர்தலின் வெற்றி திருவிழா ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லோரும் ஒன்றுபடுவோம் ; எல்லோரும் வளர்ச்சி பெறுவோம் மற்றும் நமது வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று அவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.