குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு இஸ்லாமிய மத தலைவர் பாராட்டு தெரிவித்ததை பா.ஜ.க வரவேற்றுள்ளது. குஜராத் அரசுமீதும் முதல்வர் நரேந்திரமோடி மீதும் முஸ்லிம்களின் பார்வை மாறி உள்ளது, சிறப்பாக அவர் பணியா ற்றுகிறார் என்றும் மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தை விட குஜராத்தில் முஸ்லிம்களின் நிலை
நன்றாகவுள்ளது என்றும் ஜாமியா உலாமி-இ-ஹிந்த் தலைவர் மவுலானா மகமூத்மதானி சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்று பேட்டியளித்த பாஜக செய்திதொடர்பாளர் ராஜிவ் பிரதாப்ரூடி கூறியதாவது: குஜராத்தில் முஸ்லிம்களின் நிலைபற்றியும் நரேந்திரமோடியின் செயல்பாடு குறித்தும் மதானி நேர்மறையான கருத்தைதெரிவித்துள்ளார். அவரது கருத்தை பா.ஜ.க வரவேற்கிறது. ஆட்சி நிர்வாகத்தில் நரேந்திரமோடி சிறப்பாக செயல் படுவதை சிறுபான்மையினரும் உணர்ந்து ள்ளனர்.
மோடி திறமையான நிர்வாகி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம் அதிகம்வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் பா.ஜ.க சார்பில் மோடி நிறுத்தியவேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்றார்
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.