பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட முக்கிய பா.ஜ.க தலைவர்களை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். பாஜகவினர் காவி பயங்கரவாதம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஜந்தர்
மந்தரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து பாஜகவினரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
சுசில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துஜந்தர் மந்தரில் பாஜகவினர் அதிக அளவில் கூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதுபற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிண்டே கூறிய கருத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. எனவே ஷிண்டே தனது எஜமானர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக உள்ளார் என்பதை உணரமுடியும். பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் அவர் பேசியுள்ளார்.
இந்தியாவில் பயங்கரவாதம் உள்ளதால் பாகிஸ்தானிலும் இதுபோன்று நடக்கிறது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. எனவே ஷிண்டே மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார். இது துரதிருஷ்டவசமானதாகும். இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பயங்கரவாதத்தையும், மதத்தையும் எவரும் ஒப்பிட்டுப் பேசியதில்லை. அந்த கைங்கர்யத்தை ஷிண்டே செய்துள்ளார் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத முகாம்கள் நடத்தி வருகிறார்கள் என்று ஷிண்டே கூறுகிறார். நாங்கள் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளோம். இதன்பிறகு தீவுரவாதிகள் எப்படி எங்களை சந்திக்க முடியும்?. தீவிரவாத முகாம்களை நடத்தும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து நாங்கள் எப்படி பயங்கரவாத முகாம்களை நடத்த முடியும்?.
எனவேதான், உங்களிடம் இதுபற்றிய உண்மையான தடயம் இருந்தால் எங்களை கைது செய்து, எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். எங்களைப் பற்றி உண்மையான தகவல் எதுவும் இல்லை என்றால் மன்னிப்பு, வருத்தம் தெரிவியுங்கள். நீங்கள் கூறியதை திரும்பப் பெறுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் ஷிண்டே மன்னிப்பு கோருமாறு நாங்கள் கேட்கிறோம். இந்த விஷயத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார்கள். எனவே தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த பிரச்சினையை நாங்கள் பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்றும் அவர் கூறினார்.
ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், பா.ஜ.க., ஆர். எஸ்.எஸ். கட்சியினர் காவி பயங்கரவாதிகள் என்று ஷிண்டே குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து பாஜக நாடாளுமன்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.