கரூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடை பெற்றது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தினை மக்கள் விரும்பியதால் பாஜக வெற்றிபெற முடியா விட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றுள்ளது.
நாடுமுழுவதும் தற்போது மத்தியில் ஆட்சி மாற்றத்தினை மக்கள் எதிர் பார்க்கிறார்கள். எம்பி. தேர்தல் எப்போதுவரும் என எதிர்ப் பார்க்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டு ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்.
விலைவாசி விஷம்போல ஏறிக் கொண்டு இருக்கிறது. விவசாயிகளின் பிரச்சனைகளும் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. காவிரி உரிமையை அரசிதழில் வெளியிட்டாகிவிட்டது. அடுத்த என்ன என்பதை சொல்லமுடியாத நிலைதான் இருக்கிறது.
விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு மடியும்நிலையில் இருக்கின்றனர். எல்லா பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது மது. கட்டாயம் இது ஒழிக்கப்படவேண்டும் என்று அவர் பேசினார்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.